

தாம்பரம் கார்லி பள்ளி தலைமை ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்கி கவுரவிக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டைச் சேர்ந்தவர் ராஜூ (58). இவர், தாம்பரம் கிழக்கு பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. கார்லி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரி யராக கடந்த 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நடப்பாண் டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தலைமை ஆசிரியர் ராஜூ தேர்வு செய்யப்பட்டுள் ளார். அவருக்கு, டெல்லி குடி யரசுத் தலைவர் மாளிகையில் வருகிற 5-ஆம் தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தின விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள் ளார். தேசிய நல்லாசிரியர் விரு துக்குத் தேர்வு செய்யப்பட் டுள்ள ராஜூ 2013-2014ம் கல்வி ஆண்டில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற் றவராவார். கார்லி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட் டம், பள்ளி நிர்வாகக் குழுக் கூட் டம், கிராம கல்விக் குழுக் கூட் டம் ஆகிய கூட்டங்களை மாதம் தோறும் நடத்திவருகிறார். விளையாட்டிலும் மாணவர் களை ஈடுபடுத்தி வருகிறார். மேலும், நாட்டு நலப்பணி திட்ட மாநில விருது, காஞ்சி மாவட்ட நல்லாசிரியர் விருது, ராஷ்டி ரிய வித்யா சரஸ்வதி புரஸ் கார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.