

நிணநீர் சுரப்பி இல்லாததால் கால் வீங்கி 15 ஆண்டுகளாக அவதிப் பட்ட சூடான் நாட்டைச் சேர்ந்த 26 வயது பெண் ஆலாவுக்கு, சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அதிநவீன சிகிச்சை மூலம் வீக்கத்தைச் சரிசெய்து சாதனை படைத் துள்ளனர்.
இதுகுறித்து சென்னை வட பழனியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ அறிவியல் நிறுவனம் (சிம்ஸ்) மருத்துவ நிபுணர் தர் நிருபர்களிடம் கூறிய தாவது:
மார்பகத்தில் புற்றுநோய் கட்டி களை நீக்கும்போது அக்குளில் இருக்கும் நிணநீர் சுரப்பிகளை யும் சேர்த்து எடுத்துவிடுகின்றனர். நிணநீர் சுரப்பிகள் மூலமாக புற்று நோய் மேலும் பரவாமல் இருப் பதற்காக அதை அகற்றிவிடு கின்றனர். ரேடியோதெரபியும் கொடுப்பர். இதனால் அவை சிதைந்து கைகள் வீங்கும்.
புற்றுநோய் இருப்பவர் களுக்கு நிணநீர் சுரப்பிகள் நீக்கப் பட்ட ஒன்றரை ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் அக் குள் பகுதியில் வீக்கம் வரும். 30 சதவீதம் பேருக்கே இது போன்ற வீக்கம் வரும். இதற்கு நிரந்தர சிகிச்சை இல்லாமல் இருந்தது. இப்போது நாங்கள் மேற்கொண் டுள்ள அதிநவீன சிகிச்சை மூலம் இந்நோய்க்கு சிகிச்சை இருப்பது உறுதியாகியுள்ளது.
பிறவியிலேயே சிலருக்கு நிணநீர் சுரப்பிகள் இல்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு 18 அல்லது 19 வயதில் கால் வீங்க தொடங்கும். அதுபோல சூடான் நாட்டைச் சேர்ந்த 26 வயது பெண் ஆலாவுக்கு பிறவியிலேயே காலுக்கான நிணநீர் சுரப்பி இல்லாததால் கால்கள் வீங்கின. அதிலும் இடதுகாலில் வீக்கம் அதிகமாக இருந்தது. நடக்க முடியாமல் அவதிப்பட்டார். அந்த நாட்டில் சிகிச்சை இல்லாத தால், இங்கு அனுமதிக்கப் பட்டார்.
பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, அவரது கழுத்துப் பகுதியில் உள்ள சுரப்பியை நீக்கினால் பாதிப்பு ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டது. பிறகு அந்த நிணநீர் சுரப்பியை ரத்தக் குழாயுடன் எடுத்து பாதிக்கப்பட்ட இடதுகால் பகுதியில் பொருத்தி இயங்கச் செய்தோம். 3 வாரத்துக்குப் பிறகு அவர் பூரண குணமடைந்து இன்று தாயகம் திரும்புகிறார். இதுபோன்ற சிகிச்சைக்கு சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகும் என்றார்.
பேட்டியின்போது எஸ்.ஆர்.எம். குழுமங்களின் தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் மருத்துவக் குழுவினரும் உடனி ருந்தனர்.