Published : 15 Dec 2013 12:00 AM
Last Updated : 15 Dec 2013 12:00 AM

தமிழகத்தில் ‘ஹோம் கேர் நர்ஸிங்’ பயிற்சி முதியோர் நலனுக்காக விரைவில் அறிமுகம்

முதியோர் நலனை பாதுகாப்ப தற்காக கேரளத்தைப் போன்று தமிழகத்திலும் விரைவில் ‘ஹோம் கேர் நர்ஸிங்’ பயிற்சி அறிமு கப்படுத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) வி.கனகசபை தெரி வித்தார்.

சென்னையில் சனிக்கிழமை தொடங்கிய முதுமையியல் மருத்து வம் தொடர்பான 2 நாள் சர்வதேச மாநாட்டில் தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) கனகசபை பேசியதாவது:

தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 3 கல்லூரிகளில் முதுமையியல் மருத்துவம் சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. மாநிலத்தில் உள்ள 225-க்கும் மேலான செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் 17 ஆயிரத்துக்கும் அதிகமான செவிலியர்கள் உருவாகிறார்கள். இவர்கள் உலகம் முழுக்க உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர்.

கேரளாவில் வீட்டுக்கே சென்று நோயாளிகளைக் கவனிக்கும் ‘ஹோம் கேர் நர்ஸிங்’ பணிகள் அதிகரித்து வருகின்றன. முதியவர்கள், மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற சிரமப்படுகின்றனர். எனவே, அவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் செவிலியர்களின் பணியை ‘ஹோம் கேர் நர்ஸிங்’ என அழைக்கிறோம்.

தமிழகத்திலும் தற்போது பல இடங்களில் ‘ஹோம் கேர் நர்ஸிங்’ தேவை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப முறையான பயிற்சியை செவிலியர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக விரைவில் ‘ஹோம் கேர் நர்ஸிங்’ என்ற பயிற்சிப் படிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளோம். இதன் மூலம் முதியவர்களின் நலனில் இன்னும் ஆழ்ந்த‌ அக்கறை எடுத்துக் கொண்டு சிறந்த சிகிச்சையை வழங்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x