Published : 14 Aug 2016 10:42 AM
Last Updated : 14 Aug 2016 10:42 AM

குற்றச் செயல்களை தடுக்க போலீஸார் எண்ணிக்கையை பெருமளவு அதிகரிக்க வேண்டும்: சிபிஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே.ராகவன் யோசனை

குற்ற செயல்களை தடுக்க, மக்கள் தொகைக்கு ஏற்ப காவல்துறை யினரின் எண்ணிக்கையை அதிகரிப் பதுடன் தகவல் தொழில்நுட்ப வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்று சிபிஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே.ராகவன் யோசனை தெரிவித்தார்.

அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் ‘சென்னை வாரம் 2016’ கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை போலீஸின் செயல் பாடுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.கே.ராகவன் பேசியதாவது:

சென்னை பெருநகரில் 80 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்கள் தொகைக்கு ஏற்ப போலீஸாரின் எண்ணிக்கை இல்லை. எனவே, மக்கள் தொகைக்கு ஏற்ப போலீஸாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேலும் நவீனப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள், குற்றச் செயல்களை தடுக்க பெரிதும் பயன்படும்.

குற்றங்களை தடுக்க பொது மக்கள், சமுதாய அமைப்புகளுடன் காவல்துறையினர் அவ்வப்போது ஆலோசனை நடத்த வேண்டும். பொதுமக்களும் காவல்துறை யினரை மட்டும் நம்பி இருக்கா மல், தங்கள் பாதுகாப்பில் முன் னெச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை குடியிருப் போர் நலச் சங்கத்தினர் எடுக்க வேண்டும்.

வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டிச் செல்வதால் சாலையில் செல்லும் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற குற்றங் களைத் தடுப்பதற்காக மோட்டார் வாகனச் சட்டத்தில் மத்திய அரசு அண்மையில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. சென்னையில் போக்கு வரத்து நெரிசல் அதிகம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், போக்குவரத்து வசதிகளை மேம் படுத்துவதற்கு இங்கு வாய்ப்புகள் உள்ளன. வெளிமாநிலத்தவர்கள், பிற நகரங்களைச் சேர்ந்தவர் கள்தான் அதிக குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்துரையாடலில் பங்கேற்ற பலர், ‘‘சென்னையில் போக்கு வரத்து விதிகளை ஏராளமானோர் மீறுகின்றனர். தண்டனைகளை கடுமையாக்கினால்தான் இதைத் தடுக்க முடியும். காவல் நிலையங்களில் நடக்கும் தவறு களை கண்காணிக்க அனைத்து காவல் நிலையங்களிலும் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்’’ என்பன உள்ளிட்ட கருத்துகளை தெரிவித்தனர். அவர் களின் கேள்விகளுக்கு ஆர்.கே. ராகவன் விளக்கம் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x