Published : 23 Feb 2014 12:00 AM
Last Updated : 23 Feb 2014 12:00 AM

வேதாரண்யம் - தேவகோட்டை பாதயாத்திரைக்கு இளைஞர் காங்கிரஸ் திட்டம்: ராகுல் காந்தியையும் பங்கேற்க வைக்க மும்முரம்

மத்திய அரசின் சாதனைகளை விளக்குவதற்காக, 2010 அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று கன்னியா குமரியிலிருந்து இளைஞர் காங்கிரஸார் பாதயாத்திரை தொடங்கி னார்கள். 125 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 22 நாடாளு மன்றத் தொகுதிகளில் 1350 கிலோ மீட்டர் தூரம் கடந்த இந்தப் பாத யாத்திரை சென்னையில் முடித்து வைக்கப்பட்டது. இப்போது அதே பாணியில் மீண்டும் பாதயாத்தி ரையை தொடங்குகிறது இளைஞர் காங்கிரஸ்.

1930 மார்ச் 2-ல், உப்புக்கு வரி விதித்த பிரிட்டீஷ் அரசாங்கத்தை எதிர்த்து 78 தியாகிகளுடன் தண்டி நோக்கி மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரக யாத்திரை தொடங் கினார். அதேநாளில் தமிழகத்தில் வேதாரண்யத்திலும் உப்புச் சத்தியாக்கிரக போராட்டம் நடந்தது. இதை நினைவு கூறும் வகையில் மார்ச்சில் வேதாரண்யத்திலிருந்து யாத்திரையை தொடங்குகிறது இளைஞர் காங்கிரஸ்.

நாகை மாவட்டம் வேதாரண்யத் திலிருந்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைவரை பாதயாத்திரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாதயாத்திரை பயணிக்கும் வழியை ஒட்டியே மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத் தின் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியும் வருகிறது. இந்தப் பாதயாத்திரையில் ராகுல் காந்தியையும் கலந்து கொள்ள வைப்பதற்காக கார்த்தி சிதம்பரம் தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் தரப்பில் ‘தி இந்து’விடம் பேசியவர்கள், “வேதாரண் யம் விடுதலை போராட்ட வரலாற் றில் முக்கியத்துவம் வாய்ந்த இடம். அதனால் அங்கிருந்து பாதயாத்திரையை தொடங்க திட்டமிடுகிறோம்.

தேவகோட்டை தியாகிகள் பூங்கா வில் யாத்திரையை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. யாத்திரை யில் கலந்து கொள்ள ராகுல் காந்தியை கட்டாயம் அழைத்து வருவதாக கார்த்தி சிதம்பரம் உறுதி கொடுத்திருக்கிறார். ராகு லும் யாத்திரையில் சிறிது தூரம் நடப்பார்.

மாநில இளைஞர் காங் கிரஸ் துணைத் தலைவர் விஜய் இளஞ்செழியன் வேதாரண்யத்தி லிருந்து தேவகோட்டை வரை பாத யாத்திரை மேற்கொள்ளப்படும் வழிகள், தேவகோட்டையில் பொதுக் கூட்டம் நடைபெறும் இடம் உள்ளிட்டவைகளை கடந்த 18-ம் தேதி பார்வையிட்டார்.

இதனிடையே, “தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் இருப்பதால் கடலோர மாவட்டங்களில் இளைஞர் காங்கிரஸார் பாதயாத்திரை மேற்கொள்வது தேவையற்ற சிக்கல்களை உண்டாக்கும்’’ என்று சொல்லி, பாதயாத்திரை திட்டத்துக்கு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சத்தாவ் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டதாகவும் காங்கிரஸின் இன்னொரு தரப்பில் சொல்லப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x