

திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வ இந்து பரிஷத்தின் மாநில நிறுவன தலைவர் வேதாந்தம் கூறியதாவது:
அன்பை வெளிப்படுத்துவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. பொது இடங்களில் முத்தமிடுவது சரியானது இல்லை. முத்தப் போராட்டம் ஒரு கலாச்சார சீரழிவு. இதன் மூலம் நமது பண்பாடு அழிவை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது. இந்த முத்தப் போராட் டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை செய்துவருகிறோம்.
தற்போது தமிழ்நாட்டில் தீவிர வாத இயக்கங்களைச் சேர்ந்தவர் கள் வேகமாக செயல்பட ஆரம் பித்துள்ளார்கள். இதனைத் தடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பெருமள வில் மதமாற்றம் நடைபெற்றுவருகிறது.
மதமாற்றத்தால் இந்து மதம் அழிக்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி 25-ம் தேதி ஓசூரில் விஎச்பி மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதில் சைவ, வைணவ மடாதிபதிகள், சங்கராச்சாரியார்கள் பங்கேற்க உள்ளனர் என்றார். பேட்டியின்போது, விஎச்பி மாநில தலைவர் ஆர்.எஸ்.நாராயணசாமி உடன் இருந்தார்.