

தமிழகம் முழுவதும் 22 வாகன ஆய் வாளர்கள் உட்பட 27 பேருக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, புதிய பணியிடங் களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்துத் துறையில் வாகன ஆய்வாளர்கள் நிலை -1, மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி, போக்குவரத்து துணை ஆணையர், மாநில போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்களுக்கு வட்டார போக்கு வரத்து அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், சென்னை தென்மேற்கு வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் வாகன ஆய்வாளராக இருந்த டி.மாதவன், தென்கிழக்கு அலுவலக வாகன ஆய்வாளராக இருந்த எஸ்.சுதாகர், வடக்கு அலுவலக வாகன ஆய்வாளர் ஜே.ஜான்போஸ்கோ உள்ளிட்ட 27 பேருக்கும் வட்டார போக்குவரத்து அதிகாரியாக பதவி உயர்வு அளிக் கப்பட்டு, பல்வேறு பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.