ஆளுநரின் தாமதத்தின் பின்னணியில் பாஜக: ஆட்சியை கலைக்க திட்டமிடுவதாக சசிகலா தரப்பினர் புகார்

ஆளுநரின் தாமதத்தின் பின்னணியில் பாஜக: ஆட்சியை கலைக்க திட்டமிடுவதாக சசிகலா தரப்பினர் புகார்
Updated on
2 min read

யாரையும் ஆட்சி அமைக்க அழைக் காமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருவதன் பின்னணியில் பாஜக இருப்பதாக சசிகலா ஆதர வாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக கடந்த 5-ம் தேதி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். 7-ம் தேதி சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால், ஆளுநரிடம் இருந்து அழைப்பு வரவில்லை.

இந்நிலையில் கடந்த 7-ம் தேதி இரவு ஜெயலலிதா நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் பெற்றதாகவும், அதனால் ராஜினா மாவை வாபஸ் பெறப்போவ தாகவும் தெரிவித்தார். இது தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் எந்த முடிவையும் எடுக்காமல் அமைதி காத்து வந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 9-ம் தேதி ஆளுநரை சந்தித்த ஓபிஎஸ், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அடுத்த சில மணி நேரங்களில் ஆளுநரை சந்தித்த சசிகலா, பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கோரினார். ஆனாலும் ஆளுநர் யாரையும் அழைக்கவில்லை. இதனால் சசிகலா ஆதரவாளர்களின் கோபம் ஆளுநர் மீது திரும்பியது.

அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் தனியார் விடுதிக்குச் சென்ற சசிகலா, “அதிமுகவை பிளவுபடுத்தவே ஆளுநர் தாமதம் செய்து வருகிறார். பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம். எதற்கும் அஞ்ச மாட்டோம்” என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

ஆளுநர் மவுனம்

இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்தது. இதனால் அவர் 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவர் நேற்று முன்தினம் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

ஆனாலும் இதுவரை ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆளுநரின் தொடர் மவுனம் சசிகலா ஆதரவாளர்களை கொதிப் படையச் செய்துள்ளது. கூவத்தூ ரில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் நவநீத கிருஷ்ணன், “பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்தும் எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் அழைக்காதது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி. ஆளுநரின் தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என குற்றம்சாட்டினார்.

எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு

கூவத்தூரில் செய்தியாளர் களிடம் பேசிய எம்.எல்.ஏ.க்கள், “தமிழகத்தில் ஆட்சியை கலைக்க பாஜக திட்டமிடுகிறது. அதனால் தான் ஆளுநர் தாமதப்படுத்தி வருகிறார்” என குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக சசிகலா ஆதர வாளர் ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

இன்னும் 4 மாதங்களில் குடி யரசுத் தலைவர், துணைத் தலை வர் தேர்தல் நடைபெறவுள்ளது. கணிசமான எம்.பி., எம்எல்ஏக் களைக் கொண்டுள்ள சிவசேனா பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறது. எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் சிவசேனாவின் ஆதரவு பாஜகவுக்கு கிடைக்காது. எனவே, அதிமுகவின் 50 எம்.பி.க் கள், 135 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற பாஜக முயற்சித்து வருகிறது.

தமிழகத்தில் நிலையான ஆட்சி இருந்தால் அதிமுகவின் ஆதரவைப் பெற முடியாது. அப்படியே பெற்றாலும் அதற்காக அதிமுகவின் கோரிக்கைகள், நிர்பந்தங்களை ஏற்க வேண்டியிருக்கும். எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தால் அதிமுக ஆதரவை எளிதில் பெற்று விடலாம் என பாஜக கணக்கு போடுகிறது. அதற்காக குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும்போது தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்க வேண்டும் என திட்டமிட்டு பாஜக சதி செய்து வருகிறது.

அதற்காகவே ஓபிஎஸ்ஸை தூண்டி விட்டு சசிகலாவுக்கு எதிராக பேச வைத்தார்கள். இப்போது தீபாவையும் ஓபிஎஸ் பக்கம் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சதித் திட்டத்தை புரிந்து கொண்டுதான் அதிமுக எம்.எல்.ஏ.க் கள் உறுதியாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவை உடைத்து பாஜக வுடன் கூட்டணி அமைக்கவும், பின்னர் பாஜகவிலேயே இணைக் கவும் மோடியும், அமித்ஷாவும் திட்டமிடுகின்றனர். இந்த சதித் திட்டத்துக்கு உதவும் வகையி லேயே ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என சசிகலா ஆதர வாளர்கள் குற்றம்சாட்டி வரு கின்றனர்.

ஓபிஎஸ், தீபா பின்னணியில் பாஜக இருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in