

திமுக ஆட்சியில் நடைபெற்ற சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டியதில்லை என பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் (ஜூலை 28) பட்ஜெட் மீதான விவாதத்தை முடித்து வைத்து பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ‘‘தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது’’ என குற்றம் சாட்டினார்.
அதற்கு பதிலளித்த ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ‘‘கடந்த திமுக ஆட்சியில் திருவா ரூரில் திமுக மாவட்டச் செயலாளர், அவரது வீட்டில் கொலை செய்யப் பட்டார். அதுபோல மதுரையில் நடந்த தீ வைப்பு சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இப்படி தங்கள் ஆட்சியில் வன்முறைக ளைத் தடுக்கத் தவறிய திமுகவி னருக்கு சட்டம் - ஒழுங்கு பற்றி பேச தகுதி இல்லை’’ என்றார்.
அமைச்சரின் இந்த பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுக்கவே, அதிமுக குறித்து ஒரு கருத்தை துரைமுருகன் தெரிவித்தார். அதனை அவைக் குறிப்பிலிருந்து நீக்க பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின், ‘‘துரைமுருகன் பேசியது நீக்கப்பட்டதுபோல அமைச்சர் பேசியதையும் நீக்க வேண்டும். இல்லையெனில் நாளை (ஜூலை 29) நிதி அமைச்சர் பதிலுரையை புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்’’ என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய பேரவைத் தலைவர், ‘‘அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதில் நீதி மன்றத்துக்கு குந்தகம் விளை விக்கும் அம்சங்கள் இருந்தால் நீக்கப்படும். இதுகுறித்து எனது முடிவை நாளை (ஜூலை 29) அறி விக்கிறேன். அதுவரை இதனை ஊடகங்கள் வெளியிடக் கூடாது’’ என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பட்ஜட் விவாதத்தில் துரைமுருகன் தொடர்ந்து பேசினார்.
நேற்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் மு.க.ஸ் டாலின் எழுந்து, ‘‘அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதை நீக்க வேண்டும். இதுகுறித்த முடிவை உடனே அறிவிக்க வேண்டும்’’ என்றார். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுக்கவேஸ் டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் நிதி அமைச்சரின் பதிலுரையை புறக் கணித்து வெளிநடப்பு செய்தனர்.
நிதி அமைச்சரின் பதிலுரை முடிந்ததும் பேசிய பேரவைத் தலைவர், ‘‘சட்டப்பேரவையில் நேற்று (ஜூலை 28) அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதை தீவிர மாக ஆராய்ந்து பார்த்தேன். அதில் நீதிமன்றத்துக்கு குந்தகம் விளை விக்கும் எந்த அம்சமும் இல்லை. எனவே, அவரது பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டியதில் லை’’ என உத்தரவிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘‘அதிமுக உறுப்பினர் ராஜன் செல் லப்பா சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியது ஏற்கெனவே பலமுறை இந்த அவையில் பேசப்பட்டு, அவைக் குறிப்பில் பதிவாகியுள் ளது என்பதால் அதை நீக்க வேண்டியதில்லை’’ என்றார்.