

வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தம் குறித்த ஆய்வு நிலுவையில் இருப்ப தால், வழக்கறிஞர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படாது. ஆனால், பணிக்கு திரும்பத் தவறினால், பழைய விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வழக்கறிஞர்கள் மீது உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களே நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் சட்ட விதிகளில் சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இது தங்களது உரிமையை பாதிப்பதாகக் கூறி மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரணி உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடு பட்டனர். நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த 19 வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு விளக்கம் கேட்டு இந்திய பார் கவுன்சில் அறிவுறுத் தலின் பேரில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கிடையே, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலை தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் உள்ளிட்டோர் சந்தித்து, வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் அனைத்து நீதிபதிகள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வத் துக்கு உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தகவல் அனுப்பியுள் ளார். அதில் கூறியிருப்பதாவது:
வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் கொண்டு வரப்பட்டுள்ள திருத் தத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி அளிக்கப்பட்டுள்ள பரிந் துரைகள் பற்றி தலைமை நீதிபதி யால் அமைக்கப்பட உள்ள குழு ஆராயும். வழக்கறிஞர்கள் சங்கப் பிரதிநிதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்களது கருத்துகளை யும் குழு கேட்கும்.
இதுதொடர்பான கோரிக்கை கள் பரிசீலிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்வரை, வழக்கறிஞர் கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தமிழ்நாடு பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரிடம் தலைமை நீதிபதி ஏற்கெனவே உறுதிமொழி அளித்துள்ளார். அதை அனைத்து நீதிபதிகள் கூட்டம் உறுதி செய்கிறது. புதிய விதிகள் குறித்த ஆய்வு நிலுவை யில் இருப்பதால், அதன்படி வழக் கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக் கப்படாது. அதே நேரம், வழக் கறிஞர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பு வதைப் பொருத்தே இது அமையும். பணிக்குத் திரும்பத் தவறினால் ஏற்கெனவே உள்ள விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.