

சென்னையில் தி.நகர், அயனாவரம், அடையாறு உள் ளிட்ட இடங்களில் உள்ள கன்னட சங்க பள்ளிகளுக்கு நேற்று மதியம் திடீரென அரைநாள் விடுமுறை விடப்பட்டது. பெற் றோர்கள் அவசர அவசரமாக பள்ளிக்கு வந்து தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். திடீர் விடுமுறை குறித்து கன்னட சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘காவிரி பிரச்சினை போராட்டம் காரணமாக விடுமுறை விட வில்லை. காலாண்டு தேர்வுக்காக விடுமுறை விட்டுள்ளோம்’’ என்று தெரிவித்தனர்.