திமுக ஆட்சிக் காலத்தில் அம்பாசிடர்போல இருந்த ஆவின் நிறுவனம் தற்போது ‘ஆடி’ கார் போன்று ஜொலிக்கிறது: அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கருத்து

திமுக ஆட்சிக் காலத்தில் அம்பாசிடர்போல இருந்த ஆவின் நிறுவனம் தற்போது ‘ஆடி’ கார் போன்று ஜொலிக்கிறது: அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கருத்து
Updated on
1 min read

திமுக ஆட்சியில் பழைய அம்பா சிடர் காராக இருந்த ஆவின் நிறுவனம், தற்போது நவீனப்படுத் தப்பட்டு, புதுமை நிறைந்த ஆடி காராக மாறியுள்ளது என பால் வளத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று பால் வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 1.90 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் அதிக பால் உற்பத்தி செய்யும் 10 மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் குவிந்த நஷ்டம், தற்போது குறைக்கப்பட்டு, தனது சொந்த நிதியில் இருந்து திட்டப்பணிகளை மேற்கொள்ளும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், உள்ளூர் பால் தேவையை பூர்த்தி செய்ததுபோக, மீதமுள்ள 31 லட்சம் லிட்டர் பாலை 17 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு அனுப்புகின்றன. அரசின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக, தற்போது 17 பால் பண்ணைகள், 35 பால் குளிரூட்டும் நிலையங்கள், 299 மொத்த பால் குளிர்விப்பு மையங்கள் மூலம் தினமும் 32 லட்சம் லிட்டருக்கும் அதிகமான பால் கையாளப்படுகிறது.

ஆவின் மூலம் சென்னையில் தினமும் 11.70 லட்சம் லிட்டர் பால் விற்கப்படுகிறது. கடந்த 2011-16ம் ஆண்டுகளில் ஆவின் நிறுவன கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்த ரூ.593.65 கோடி நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் ரூ.97.35 கோடி மட்டுமே ஒதுக்கப் பட்டது. இதனால் திமுக ஆட்சியில் அம்பாசிடர் கார்போல பழமையாக இருந்த ஆவின் நிறுவனம், தற்போது நவீனப்படுத்தப்பட்டு, புதுமை நிறைந்த ஆடி கார் போல் ஜொலிக்கிறது.

சென்னையில் உள்ள 16 மண்டலங்களில் 5 மண்டலங்களில் அதிநவீன ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 11 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. ஆவின் பால் பொருட் கள் விற்பனை தற்போது ரூ.469.15 கோடியாக உயர்ந்துள்ளது. இது திமுக ஆட்சியைவிட 2 மடங்கு அதிகம். மேலும், கடந்த 3-ம் தேதி நிலவரப்படி பால் கொள்முதல் இதுவரை இல்லாத அளவான 31 லட்சத்து 77 ஆயிரம் லிட்டர் என்ற உச்ச அளவை எட்டியுள்ளது.

தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து, 17 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங் களில் அதிநவீன பாலகங்கள் ரூ.8.50 கோடியில் அமைக்கப்படும். 35 பால் குளிரூட்டும் நிலையங்கள் ரூ.7 கோடியில் மேம்படுத்தப்படும். கால்நடை தீவன உற்பத்தி செலவை குறைத்து, பால் உற்பத்தியை அதி கரிக்க ஏற்கெனவே செயல் படுத்தப்பட்டு வரும் சமச்சீர் கால்நடை தீவன திட்டம் காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய ஒன்றியங்களுக்கு இரண்டாம்கட்டமாக, ரூ.7.08 கோடியில் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in