திருநாவுக்கரசர் பாஜகவில் இருந்திருந்தால் பிரதமர் ஆகி இருப்பாரா?- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி

திருநாவுக்கரசர் பாஜகவில்  இருந்திருந்தால் பிரதமர் ஆகி இருப்பாரா?- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி
Updated on
1 min read

திருநாவுக்கரசர் பாஜகவில் இருந்திருந்தால் பிரதமராகி இருப்பாரா என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.

ஈரோடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக, பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று அவர்களைச் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான போராட்டத்தை மதித்து, அவர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முன்வர வேண்டும். ஏற்கெனவே வறட்சியின் பிடியில் சிக்கி விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். போக்குவரத்து ஊழியர்களுக்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாது. இப்பிரச்சினையில் முதல்வர் தலையிட்டு சுமுக முடிவு எடுக்க வேண்டும்.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு அமைச்சர் அது தேவையில்லை என கூறி உள்ளார். அவரது பேச்சில் நியாயம் இல்லை. அவரது பேச்சு பொறுப்பற்ற பேச்சாக உள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தான் அதிமுகவில் இப்போது இருந்திருந்தால் முதல்வர் ஆகி இருப்பேன் என்கிறார்.

இது அவரது தனிப்பட்ட கருத்து. அப்படியானால் பாஜகவில் இருந்திருந்தால் அவர் பிரதமர் ஆகி இருப்பாரா?. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in