

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, தொழிற்கல்வி பயிலும் சிறுபான் மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற இணை யதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமி யர்கள், சீக்கியர்கள், பார்சி, ஜெயின் மற்றும் புத்த மதங்களைச் சேர்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ, மாணவிகள், 2016-17ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற www.scholorships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
அதற்கான கடைசி தேதி அக்டோபர் 31 ஆகும். மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 279 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த உதவித்தொகையை பெற முந்தைய ஆண்டு பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.