சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்துடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்துடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
Updated on
1 min read

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய கப்பல், நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்துப் பேசினார்.

தலைமைச் செயலகத்தில் நடை பெற்ற இந்தச் சந்திப்பின்போது தமிழக நெடுஞ்சாலை, பொதுப் பணி, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச் சாமி, மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சென்னை துறைமுகத்தின் தலைவர் பி.ரவீந்திரன், காமராஜர் துறைமுகத்தின் தலைவர், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் தலைவர் ஆனந்த சந்திரபோஸ், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உறுப்பினர் டி.ஓ.டவாடே மற்றும் மத்திய, மாநில அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சந்திப்பின்போது சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர் மட்டச் சாலை, இணையம் துறைமுகம், தமிழகத்தில் மேற் கொள்ளப்படும் தேசிய நெடுஞ் சாலைப் பணிகள் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல் படுத்தும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

பிறகு செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய தாவது: தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், அதிகாரி களுடன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி னோம்.

ஜல்லிக்கட்டுக்காக நாளை (இன்று) அலங்காநல்லூரில் திமுக போராட்டம் நடத்தவுள்ளது. இதில் காங்கிரஸும் கலந்துகொள்ளும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் அறி வித்துள்ளார். போராட்டம் நடத்தி னால் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றால் அந்தப் போராட்டத்தில் முதல் ஆளாக நான் பங்கேற்க தயாராக இருக்கிறேன்.

காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளைகளைச் சேர்க்கும் சட்டத் திருத்தம் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் கொண்டு வரப் பட்டது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடைபெறாததற்கு இந்தச் சட்டத் திருத்தமே காரணம். இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வந்ததற்காக காங்கிரஸ் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை கைவிட வேண்டும். விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in