

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணையும் திட்டம் இல்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கலந் தாய்வுக் கூட்டம் நேற்று மது ரையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க வந்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மீனவர்கள் பிரச்சினையில் மாநில அரசின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்ப்ப தில்லை. கைதான மீனவர்களை விடுவிப்பதுடன் சேதமடைந்த படகுகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். கச்சத்தீவை இலங் கைக்கு வழங்கியதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கூடங்குளம் 2-வது அணு உலையில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழக பயன்பாட்டுக்கு வழங்க வழங்க வேண்டும். பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மாவட்ட வாரியாக நிர்வாகி களிடம் ஆலோசித்த பிறகு, உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி தமிழ் மாநில காங்கிரஸை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் வலு வான இயக்கமாக செயல் படத் தொடங்கிவிட்டது. சட்டப்பேர வைத் தேர்தலுக்காகவே மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தோம். உள்ளாட்சித் தேர்தலுக்காக அக் கூட்டணியில் இணையும் திட்டம் இல்லை.
தமிழகத்தில் தொடரும் கொலை, கொள்ளையால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. அரசு விரைவான நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு நம் பிக்கை, பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை மதுரையில் சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம் குடும்ப நலம் விசாரித்துவிட்டு சிறிது நேரம் அரசியல் நிலவரம் பற்றி பேசிக்கொண்டோம் என்றார்.