

சேலம் முள்ளுவாடியில் தொடங் கப்பட்ட ரயில்வே மேம்பால கட்டுமானப் பணியை தடுத்த தாகக் கூறி இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் உள்ளிட்ட 3 பேரை கடந்த 8-ம் தேதி சேலம் டவுன் போலீஸார் கைது செய் தனர். நிபந்தனை ஜாமீனில் வந்த பியூஸ் மானுஷ், தன்னை சிறையில் காவலர்கள் தாக்கிய தாகக் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்னர் புகார் செய்தார். நீதிமன்ற காவலில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததால் நீதிமன்றத்தில் புகார் செய்ய வேண்டும் என போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில், பியூஸ் மானுஷ் நேற்று சேலம் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சண்முகப்பிரியாவிடம் புகார் மனு அளித்தார்.
இதுகுறித்து பியூஸ் மானுஷ் கூறும்போது, “என்னைத் தாக்கிய சிறை கண்காணிப்பாளர், வார்டர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாஜிஸ்திரேட்டிடம் புகார் மனு அளித்துள்ளேன்” என்றார்.