

தீனதயாள் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் படங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டிஎஸ்பி சுந்தரம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலை அருகே முரேஸ்கேட் சாலையில் உள்ள ஒரு பங்களா வீட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த 31-ம் தேதி முதல் 3 நாட்கள் தொடர்ச்சியாக சோதனை நடத்தினர். அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 71 கற்சிலைகள், 41 ஐம்பொன் சிலை கள், 75 பழமையான ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையா னவை. வீட்டில் இருந்த மான்சிங் (58), குமார் (58), ராஜாமணி (60) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சிலைகளை பதுக்கி வைத்தி ருந்த வீட்டின் உரிமையாளர் தீன தயாள், கடந்த 3-ம் தேதி இரவு கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சிலைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஐஜி பொன்.மாணிக்கவேல் முன்பு ஆஜராகி சரண் அடைந்தார்.
வயோதிகத்தின் காரணமாக போலீஸார் அவரை கைது செய்யவில்லை. அவரிடம் தினமும் காலை முதல் இரவு வரை போலீஸார் விசாரணை நடத்திவிட்டு, வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.
சென்னையில் 3 வீடுகளில் சிலைகளை பதுக்கி வைத்திருப் பதும் தெரியவந்தது. ஆழ்வார் பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலை வீட்டில் சோதனை நடத்தி முடிக்கப் பட்ட நிலையில், ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2-வது தெருவில் உள்ள வீட்டில் கடந்த 2 நாட்களாக போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த வீட்டை கிடங்காக பயன் படுத்தியிருக்கிறார் தீனதயாள். நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 75 பழங்கால ஓவியங்கள், களிமண் சிலைகள், வேலைப்பாடுகள் நிறைந்த மரச் சிலைகள் போன்றவை கைப்பற்றப்பட்டன. சில இடங்களில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த சிலை களையும் போலீஸார் கண்டுபிடித்து தோண்டி எடுத்தனர்.
மொத்தம் எவ்வளவு சிலைகள் கைப்பற்றப்பட்டன என்ற விவ ரத்தை போலீஸார் தெரிவிக்க வில்லை. சோதனை முழுவதுமாக முடிந்த பிறகு அந்த தகவல் தெரிவிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நிருபர்களிடம் சிலைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி சுந்தரம் கூறும்போது, ‘‘தீனதயாள் வீட்டில் கைப்பற் றப்பட்ட சிலைகளின் புகைப்படங் கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும். கைப்பற்றப்பட்ட சிலைகள் தங்கள் கோயிலில் இருந்து திருடப்பட்டவை என்பதை ஆதாரங்களுடன் எங்களிடம் சமர்ப்பித்தால் அதை நீதிமன்றம் மூலம் உடனே வாங்கிச் செல்லலாம். தற்போது கைப்பற்றப்பட்டுள்ள சிலைகளை பரிசோதனை செய்வ தற்காக பெங்களூருவில் இருந்து தொல்லியல் துறை அதிகாரிகள் மீண்டும் சென்னை வருகின்றனர்’’ என்றார்.