

கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2 கோடியே 42 லட்சத்து 160 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதுவரை 64 நிறுவனங்கள் ரூ.87,062 கோடி முதலீட்டில் தொழில் தொடங்குவதற்கான பணிகளை தொடங்கியுள்ளன. இந்நிறுவனங்கள் இதுவரை 25,020 கோடியே 48 லட்சம் அளவுக்கு முதலீடு செய்துள்ளன. மற்ற நிறுவனங்கள் தேவையான முன் ஆயத்த பணிகளை மேற் கொண்டுள்ளன என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித் தார்.
இது தொடர்பாக சட்டப் பேரவையில் நேற்று 110-வது விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
உயிரி தொழில்நுட்ப முறையில் ஆரம்ப நிலை நிறுவனங்கள், தொழில் முனைவோருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை தரமணியில் உள்ள டைசல் பயோபார்க் நிறுவனத்தில் ரூ.20 கோடியில் உயிரி தொழில்நுட்ப அபிவிருத்தி மையம் அமைக் கப்படும். 12 ஆயிரம் சதுர அடியில் ஆய்வகங்கள், வணிகப் பகுதிகள், அலுவலகப் பகுதிகள் கொண்டதாக இந்த மையம் அமையும்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வல்லம் - வடகால் தொழில் பூங்காவில் 245 ஏக்கரில் வானூர்திப் பூங்கா அமைய உள்ளது. இங்கு ரூ.30 கோடியில் உலகத் தரத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இப்பூங்காவில் தொழில்களுக்கான பொது ஆய்வு மற்றும் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்.
கரூர் மாவட்டம் காகிதபுரம் காகித ஆலையின் செயல் திறன் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்த ரூ. 25 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். திருச்சி மாவட்டம் மணப்பாறை மொண்டிப்பட்டி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் காகித அட்டை ஆலைக்கு நவீன கருவிகள் வாங்கவும், கிடங்குகளை விரிவாக்கவும் ரூ. 35 கோடி ஒதுக்கப்படும்.
தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், உற்பத்தியை பெருக்கவும், நவீன இயந்திரங்களைக் கொண்டு குவாரி நடவடிக்கைளை மேற்கொள்ளவும் ரூ.20 கோடியில் 10 மணிவாரி இயந்திரங்கள், 12 சுரங்க லாரி டிப்பர்கள், 10 காற்றழுத்தி இயந்திரங்கள், 4 ஹைட்ராலிக் டிரில்லர்ஸ் வாங்கப்படும்.
அரியலூரில் உள்ள தமிழ்நாடு சிமென்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.675 கோடியில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரியலூர் பகுதிகளில் ரூ.13 கோடியே 52 லட்சத்தில் மேம் பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப் படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு சிப்காட் தொழில் வளாகத்தில் ரூ.100 கோடியில் உலகத் தரத்திலான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இப்பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சிறு வணிகர்களுக்கு உதவி செய்ய, 228 வணிகவரி அலுவல கங்களில் கட்டணமில்லா உதவி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
தமிழ்நாடு வணிகர் நல வாரியம் மூலம் வணிகர்களுக்கான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெற்று வணிகம் செய்யும் சிறு வணிகர் களும், இந்த நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட் டுள்ளனர். அதிமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வணிகர் நல வாரியத்தின் தொகுப்பு நிதி ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்.
வணிகவரித் துறையின் அனைத்து சேவைகளும் கணினி மயமாக்கப்பட்டு e-C Tax என்ற புதிய மென்பொருள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. கணினி வசதி இல்லாத சிறு வணிகர்கள் தங்களது மாதாந்திர நமூனாக் களை கணினியில் பதிவேற்றம் செய்ய உதவியாக 228 வணிக வரி மையங்களில் கட்டணமில்லா உதவி மையங்கள் ஏற்படுத் தப்படும்.
தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் 486 அரசு மின் சேவை மையங்கள் மூலம், வணிகவரித் துறையின் புதிய இணையதள சேவைக்கு பதிவு செய்தல், புதிய பதிவுச் சான்று பெறுதல், வங்கிகளில் வரி செலுத்துவதற்குரிய மின் செலுத்துகைச் சீட்டு மற்றும் துறையின் படிவங்களை பதி விறக்கம் செய்தல் போன்ற சேவைகளை உரிய கட்டணம் செலுத்தி பெற வழிவகை செய்யப்படும்.
வணிகவரித் துறைக்கு கடந்த 5 ஆண்டுகளில் 64 அலுவலகங் களை உள்ளடக்கிய 33 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கிருஷ்ணகிரி, நாமக்கல், பழநி ஆகிய இடங்களில் ரூ.6 கோடியே 77 லட்சம் செலவில் 9 வணிகவரி அலுவலகங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வணிகவரி கட்டிடங்கள் கட்டப்படும்.
புதிய மென்பொருள்
பதிவுத் துறையில் ஆவணப் பதிவு தொடர்பான அனைத்தும் கணினிமயமாக்கப்படும். இதற் கான மென்பொருள் தயாரிக் கப்பட்டு சோதனை முறையில் 20 அலுவலகங்களில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வணிகவரி அலுவலகங்களிலும் இந்த மென்பொருள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆவணப் பதிவுகள் நடைபெற வழிவகை செய்யப்படும்.
இதன்மூலம் டெம்ளேட் வசதியை பயன்படுத்தி பொதுமக் களே ஆவணங்களை தயாரித்து அதை உரிய சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு இணைய தளம் மூலம் அனுப்பி வைக்க முடியும். ஆவணதாரர்களின் விரல் ரேகைப் பதிவுகள் மூலம் அத்தாட்சி செய்தல், செல்பேசி எண், ஆதார் எண் ஆகியவற்றை பெற்று குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். இதனால் போலி ஆவணப் பதிவு மற்றும் ஆள் மாறாட்டம் தடுக்கப்படும்.
பதிவு செய்யப்பட்ட ஆவ ணங்களின் சான்றிட்ட நகல்களை இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தி பெற ஏற்பாடு செய்யப்படும். சொத்துரிமை தொடர்பாக வருவாய் துறை யால் பராமரிக்கப்படும் விவரங் கள் இணையதளம் மூலம் சரிபார்க்கும் வசதி ஏற்படுத்தப் படும். ஆவணப் பதிவு தொடர் பான விவரங்களை இணைய தளம் மூலமே வருவாய்த்துறை பார்க்க இயலும் என்பதால் விரைவாக பட்டா மாறுதல் செய்ய முடியும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.