மருத்துவக் கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் அரசு குறுக்கீடு?

மருத்துவக் கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் அரசு குறுக்கீடு?
Updated on
1 min read

இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு 3 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் டிசம்பர் 10-ம் தேதி நடக்கிறது. மனுத் தாக்கல் செய்த 10 பேரில், 2 பேர் திடீரென வாபஸ் பெற்றனர்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின்கீழ் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், 16 தனியார் மருத்துவக் கல்லூரி கள் உள்ளன. இவற்றில் 10 கல்லூரிக ளுக்கு ஒருவர் வீதம் 3 உறுப்பினர்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்சிஐ) தேர்ந்தெடுக்கப்பட உள்ள னர். இதற்கான தேர்தல் டிசம்பர் 10-ம் தேதி நடக்க உள்ளது. 3 இடங்களுக்கு10 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் எஸ்.கீதா லட்சுமி மற்றும் கோவை பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மைய முதல்வர் டாக்டர் எஸ்.ராமலிங்கம் ஆகியோர் திங்கள்கிழமை தங்கள் மனுக்களை திடீரென வாபஸ் பெற்றுக்கொண்டனர். தற்போது என்.தீன் முகமது இஸ்மாயில் (சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்), மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் ஜே.ஏ.ஜெயலால் (கன்னியாகுமரி), எஸ்.கனகசபாபதி (தஞ்சாவூர்), ஜே.மோகனசுந்தரம் (ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி டீன்), கே.பிர காசம் (சேலம் அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி), டி.சாந்தாராம் (தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர்), சுதா சேஷையன் (சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்), எல்.பி.தங்கவேலு (கோவை கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர்) ஆகிய 8 பேர் களத்தில் உள்ளனர்.

இந்தத் தேர்தலில் அரசு குறுக்கீடு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.செந்தில் கூறுகையில், ‘‘எம்சிஐ தேர்தலில் மனுத் தாக்கல் செய்தவர்களை வாபஸ் பெறு மாறு சிலர் மிரட்டியதாக புகார்கள் வந்தது. அரசியல் மற்றும் அரசின் குறுக்கீடு இல்லாமல் தேர்தலை நேர்மையாகவும் வெளிப்படையா கவும் நடத்த வேண்டும்’’ என்றார்.

எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை க்கழக பதிவாளரும் தேர்தல் அதிகாரியுமான ஜான்சி சார்லஸ் கூறுகையில், ‘‘டிசம்பர் 10-ம் தேதி தேர்தல் நடக்கும். அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்’’ என்றார்.

டாக்டர்கள் பிரதிநிதி

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் சுமார் 1 லட்சம் பேர் உள்ளனர். இவர்களின் சார்பில் ஒருவரை எம்சிஐக்கு பிரதிநிதியாக தேர்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் நடந்தது.

8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடைசியாக 7 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் போட்டியின்றி வெற்றி பெற்ற தாக அறிவிக்கப்பட்டது. அவரது வெற்றிக்காக, அரசு அதிகாரிகளே மற்ற வேட்பாளர்களைச் சந்தித்து மனுக்களை வாபஸ் பெறச் சொன்னதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in