

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வியாண் டுக்கு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில், 2,055 மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் உள்ள 13 வகை இளநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பட்டப் படிப்பு களுக்கான சேர்க்கை விண்ணப் பங்கள் கடந்த மே மாதம் 4-ம் தேதி முதல் ஜூன் 11-ம் தேதி வரை இணையதளம் மூல மாகப் பெறப்பட்டன.
மொத்தமுள்ள 2,600 இடங் களுக்கு, 36,280 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. சிறப்புப் பிரிவினர்களுக்கான கலந் தாய்வு 27-ம் தேதி நடைபெற் றது. இதில், 31 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பார்வையற் றோருக்கான பிரிவில் யாரும் விண்ணப்பம் அளிக்காததால் அந்த இடம் நிரப்பப்படவில்லை.
பொதுப் பிரிவினருக்கான கலந் தாய்வு 4-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. கலந்தாய்வு குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் கூறியிருப்பதாவது:
முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இதில், 5,757 மாண வர்கள் அழைக்கப்பட்டதில் 2,122 மாணவர்கள் கலந்துகொண்டனர். 2,055 மாணவர்களுக்கு சேர்க்கைக் கான அனுமதி வழங்கப்பட்டு உள் ளது.
பிளஸ் 2 வகுப்பில் வேளாண்மை பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கு தொழிற்கல்வி என்ற ஒதுக்கீட்டின் அடிப்படை யில் 40 இடங்கள் உள்ளன. அவர் களுக்கான கலந்தாய்வு வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது. இதேபோல், பி.சி., ஓ.சி., பிரிவுகளில் 142 இடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. எஸ்.டி. பிரிவில் 23 இடங்கள் நிரப் பப்படாமல் உள்ளன. சேர்க்கை அனுமதி பெற்றுள்ள மாணவர்கள், வரும் 16-ம் தேதிக்குள் கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண் டும். கல்விக் கட்டணம் செலுத் தாதவர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும்.
தொடர்ந்து, ஏற்கெனவே காலியாக உள்ள இடங்களுடன், இந்த இடங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டு, 2-ம் கட்ட கலந்தாய்வு மூலமாக நிரப் பப்படும். 2-ம் கட்ட கலந் தாய்வு வரும் 25-ம் தேதி தொடங்கி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.