ஓபிஎஸ்ஸுக்கு மேலும் 6 எம்.பி.க்கள் ஆதரவு: ராமராஜன், தியாகு உள்ளிட்டோரும் ஆதரவளித்தனர்

ஓபிஎஸ்ஸுக்கு மேலும் 6 எம்.பி.க்கள் ஆதரவு: ராமராஜன், தியாகு உள்ளிட்டோரும் ஆதரவளித்தனர்
Updated on
2 min read

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று ஒரே நாளில் 6 எம்.பி.க்கள் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில் சசிகலா தலை மையை ஏற்காத பலரும், தற்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையின் கீழ் இணைந்து வருகின்றனர். நேற்று மட்டும் 6 எம்.பி.க்கள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மருதைராஜா (பெரம்பலூர்), செங்குட்டுவன் (வேலூர்), ஜெ.ஜெ.தி.நட்டர்ஜி (தூத்துக்குடி), ஆர்.லட்சுமணன் (மாநிலங்களவை-விழுப்புரம்), எஸ்.ராஜேந்திரன் (விழுப்புரம்) பார்த்திபன் (தேனி) ஆகிய எம்.பி.க்கள் நேற்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதேபோல முன்னாள் அமைச் சர்கள் ஜெயபால், பூனாட்சி, ரா.வில்வநாதன், தேமுதிகவி லிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக் கள் தமிழழகன், சுந்தர்ராஜன், அருண்பாண்டியன், சாந்தி, மைக்கேல் ராயப்பன், பர்கூர் முன்னாள் எம்எல்ஏ கே.இ.கிருஷ்ண மூர்த்தி, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் சகோதரி மகன் திலீப் (எ) ராமச்சந்திரன், திரைப்பட நடிகர் விக்னேஷ், அதிமுக பேச்சாளர் ராஜகோபால், ஈரோடு முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும், நடிகர்கள் ராமராஜன், தியாகு, இயக்குநர் மனோபாலா உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித் தனர்.

விழுப்புரம் எம்.பி., ஆர். லட்சு மணன் பேசும்போது, ‘‘எங்கள் ஆதரவை தெரிவிப்பது, தனியாக எடுத்த முடிவல்ல. தொண்டர்கள், பொதுமக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அளிக் கப்படும் ஆதரவு. மனசாட்சிப்படி, சுயமரியாதைக்காக கொடுக்கப் படும் ஆதரவு. முதல்வர் பதவி என்பது மக்களின் அன்பை வென்றெடுத்து, அவர்கள் பேராதர வால் அடையக் கூடியது. அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அந்த அடிப்படையில் தான் தமிழகத்தை ஆண்டார்கள். இன்று தமிழக மக்களின் எண்ணங்களை வென்றெடுத்தவர் ஓபிஎஸ். அவருக்கு ஆதரவளிக் கிறோம். பெரியவர்கள் முதல் பள்ளிக்குழந்தைகள் வரை ஆதரவு தெரிவித்துள்ளனர். முதல்வர் ஓபிஎஸ் எடுத்துள்ள முயற்சி வெற்றியடையும்’’ என்றார்.

விழுப்புரம் எம்.பி., ராஜேந்திரன் கூறும்போது, ‘‘ஜெயலலிதாவின் அன்பையும் ஆதரவையும் பெற்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். நாங்கள் எடுத் துள்ள முடிவு, 3 நாட்களாக காத் திருந்து, கிராமப்புறத்தில் இருந்து மக்கள் தெரிவித்த கருத்துக் களின் அடிப்படையில்தான் வந் துள்ளோம். ‘தயவு செய்து அந்த அம்மாவை ஆதரிக்காதீர்கள்; ஓபிஎஸ் ஜெயலலிதாவால் அடை யாளம் காட்டப்பட்டவர். அவரை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவ ருக்கு ஆதரவளியுங்கள்’ என்று மக்கள் கூறினர்’’ என்றார்.

நடிகர் ராமராஜன் பேசுகையில், ‘‘தற்போது மக்களுக்கு தெரியாமல் அரசியல் நடத்த முடியாது. ஊடகங்கள் மூலம் அரசியல் நிகழ்வுகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஜல்லிக் கட்டு பிரச்சினை, வார்தா புயல், கிருஷ்ணா நதி நீரை பெற்றுத் தந்தது என ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவர், ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு எந்தக் குறை யும் இல்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் சுருக்கமான ஓபிஎஸ் என் பதை ஓயாமல் பொறுமையாக செயல்படுவர் என்றே சொல்லலாம். மக்கள் ஓ.பன்னீர்செல்வத்தை தற் போது அடையாளம் காட்டியுள்ள னர். மக்கள் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. எனவேதான் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக் கிறேன்’’ என்றார்.

நடிகர் தியாகு பேசும்போது, ‘‘முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எளிமையான மனிதர். மக்களை நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடியவர். அதனால் அவரை ஆதரிக்கிறேன்’’ என்றார்.

‘‘ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத் தில் உள்ள கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம். அவர்களை யாரும் அழைத்துவரவில்லை. ஆனால், இதற்கு நேர்மாறாக போயஸ் தோட்டம் வெறிச்சோடி உள்ளது’’ என்று நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான அருண்பாண்டியன் கூறினார்.

ஆளுநருடன் மைத்ரேயன் எம்.பி. திடீர் சந்திப்பு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.யான மைத்ரேயன் நேற்று தமிழக ஆளுநரை சந்தித்து, கூவத்தூர் தனியார் விடுதியில் வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் பதவியை கடந்த 5-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். தொடர்ந்து அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் காபந்து முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், 7-ம் தேதி, ‘கட்டாயப்படுத்தி தன்னிடம் இருந்து ராஜினாமா பெறப்பட்டதாக’ அறிவித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின், தமிழகம் வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தனக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு அளிக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் கோரினார். சசிகலா தரப்பும் ஆட்சியமைக்க உரிமை கோரியது. இது தொடர்பாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு அதிமுக எம்.பி.யும், ஓபிஎஸ் ஆதரவாளருமான மைத்ரேயன் ஆளுநரை சந்தித்தார். அப்போது அவர், கூவத்தூரில் தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் பேச்சுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரியதாக ஓபிஎஸ் ஆதரவு வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in