

மக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து உள்ள சந்தே கத்தை மத்திய அரசு விசாரணை நடத்தி தீர்க்கவேண்டும் என காந் திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நேற்று அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓ. பன்னீர்செல்வம் முதல் பிஎச்.பாண்டியன் வரை சொல்வதை நான் முன்மொழிகிறேன். ஆனால் 72 நாட் களாக மருத்துவமனையில் அவர் இருந்தபோது, இவர்களுக்கு ஏன் இந்த ஞானம் வரவில்லை. மக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பலத்த சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தீவிர விசாரணை நடத்தி மக்களின் சந்தேகத்தை தீர்க்க வேண்டும். இரண்டு மாநிலங்களுக்கு ஒரு ஆளுநர் இருப்பது என்பது மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அப்போது தேர்தலை சந்திக்கிற அதிமுகவின் இரு அணிகளும் தோல்வியைத் தழுவும்.
தமிழகத்தை ஆட்சி செய்து வருவது குற்றவாளியான சசிகலாதான். குற்ற வாளியை சிறைக்குச் சென்று பார்த்துவந்த மூன்று அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தமிழக முதல்வர் எக்காரணத் தைக் கொண்டும் குற்ற வாளியைச் சிறையில் சந்திக்கக் கூடாது. பாஜகவால் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடி யாது.
அரசியல் ஆதாயம் இல்லாத மாணவர், இளைஞர், பொதுமக்கள் ஆகியோரை முன்வைத்து கூட்டணி அமைத்து நாங்கள் தேர் தலை சந்திப்போம். அது மக்களின் கூட்டாட்சியாக மலரும் என்றார்.