

சிந்தாதிரிப்பேட்டையில் சொத்து தகராறில் பத்திரிகை நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டுள் ளார். இதுதொடர்பாக அவரது உறவினர் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை யில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசித்துவந்தவர் கதிரவன் (47). சென்னையில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் அலு வலகத்தில் அலுவலக உதவியாள ராகப் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை அலுவலகத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திச் சென்றது. வெகுநேரமாகியும் கதிரவன் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இதற்கிடையில், கதிரவன் கடத் தப்பட்டதாக கூறப்பட்ட கார், மதுரவாயலில் ரத்தக் கறையுடன் நின்றிருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து கேள்விப்பட்ட கதிரவ னின் உறவினர்கள், ‘கதிரவன் மாயமான விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகை யிட்டனர்.
இந்நிலையில், சென்னையை அடுத்த மீஞ்சூர் வல்லூர் பகுதி யில் தனியார் சிமென்ட் ஆலை அருகே முட்புதரில் ரத்தக் காயத் துடன் 45 வயது ஆண் சடலம் கிடப்பதாக மீஞ்சூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலை சிந்தாதிரிப்பேட்டை போலீஸாருக் கும் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று விசாரித்ததில், மீஞ்சூரில் சடலமாகக் கிடந் தது கதிரவன் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். இதில், கதிரவனைக் கொலை செய்தது அவரது அக்கா மகள் ஜெயந்தியின் கணவர் யூசுப் என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது கூட்டாளிகள் பாலசுப்பிரமணி, கணேசன், ஜெயசிங், லோகேஷ் ஆகியோரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் கூறியதாவது:
கதிரவனின் அக்கா மகள் ஜெயந்தி. அவரது பெற்றோர் இறந்துவிட்டதால், ஜெயந்தியை மகள்போல் கதிரவன் வளர்த்து வந்துள்ளார். யூசுப் ஜெயந்தி திருமணத்தையும் இவர்தான் நடத்தி வைத்தார். சமீபகாலமாக, ஜெயந்தி மீது யூசுப்புக்கு சந்தேகம் இருந்துவந்துள்ளது. அவர் கதிரவ னுடன் பேசுவது பிடிக்காமல் கண்டித்துள்ளார். மேலும், கதிர வன் வசித்து வந்த வீட்டுக்கும் யூசுப் உரிமை கோரியுள்ளார். இதனால், கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள் ளது. இதைத் தொடர்ந்து, கதிர வனை யூசுப் கடத்திச் சென்று கொலை செய்துள்ளார். யூசுப் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அலுவலக ஊழியர் கதிரவன் மறைவுக்கு ‘தி இந்து’ குழுமம் தனது இரங்கலை தெரிவித்துள்ளது.