

சென்னை ராமாபுரம் அன்னை சத்யா நகரில் வசிப்பவர் சீனிவாசன்(39). ஆடிட்டர். இவரது மனைவி ரம்யா. சீனிவாசனின் தாயார் நாகம்மாள்(65). கே.கே.நகர் அம்மன் கோயில் தெருவில் நாகம்மாள் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
நாகம்மாளிடம் அதே பகுதி யைச் சேர்ந்த கோவிந்தராஜ்(40) என்பவர் மாமூல் கேட்டு மிரட்டி இருக்கிறார். ஆனால் பணம் கொடுக்க மறுத்த நாகம்மாள் இதுபற்றி தனது மகன் சீனிவாச னிடம் கூறினார். அதைத் தொடர்ந்து கோவிந்தராஜ் மீது கே.கே.நகர் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் சீனிவாசனின் வீட்டுக்கு ஒரு ரவுடி கும்பல் சென்று கொலை மிரட்டல் விடுத் துள்ளது. அப்போது சீனிவாசன் வீட்டில் இல்லை. அவரது மனை வியும், 2 குழந்தைகளும் மட்டுமே இருந்துள்ளனர். நள் ளிரவில் மீண்டும் வந்த அதே கும்பல் சீனிவாசனின் வீட்டுக் குள் பெட்ரோல் நிரப்பிய பாட்டி லில் தீ வைத்து வீட்டுக்குள் வீசியது. இதில் பயங்கர சத்தத் துடன் அது வெடித்துசிதறியது.
இதுகுறித்த தகவலின் பேரில் ராயலா நகர் போலீ ஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மாமூல் கொடுக்காத ஆத்திரத்தில் கோவிந்தராஜ் இவ்வாறு செய்தது தெரிய வந்தது. தப்பி ஓடிய அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.