கோவையில் பிடிக்கப்பட்ட ‘மிஷன் மதுக்கரை மகராஜ்’ யானை பலி: அதிகளவு மயக்க மருந்து வழங்கப்பட்டதாக சர்ச்சை

கோவையில் பிடிக்கப்பட்ட ‘மிஷன் மதுக்கரை மகராஜ்’ யானை பலி: அதிகளவு மயக்க மருந்து வழங்கப்பட்டதாக சர்ச்சை
Updated on
1 min read

கோவை மதுக்கரையில் இரு தினங்களுக்கு முன்பு மயக்க ஊசி செலுத்தி பிடித்துச் செல்லப்பட்ட ஒற்றைக் காட்டு யானை ‘மகராஜ்’ உடல்நலக் குறைவால் பலியானதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவை மதுக்கரை பகுதியில் சுற்றி வந்த 18 வயதான ஆண் காட்டு யானையை, கடந்த 19-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

டாப்சிலிப் - வரகளியாறு வனத் துறை யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட ‘மகராஜ்’ அங்கிருந்த தேக்குமரக் கூண்டுக் குள் அடைக்கப்பட்டது. மயக்க நிலை தெளிந்ததும் அதன் ஆக்ரோஷம் மேலும் அதிகமாகக் காணப்பட்டது. அங்கு மூன்றாவது முறையாக ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இரண்டு நாட்களாக அந்த யானை, வனத்துறையினர் வழங்கும் உணவுகளையும், பசுந்தீவனங்களையும் உண்ணா மல் இருந்ததாகவும், கூண்டின் மேற்கூரையை இடித்து, பிளிறி யபடியே ஆக்ரோஷமாக இருந்த தாகவும் கூறப்படுகிறது. ஆரோக்கி யத்துடன் காணப்பட்ட யானையின் உடல்நலம் இதனால் படிப்படியாக பாதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று மாலை 4.15 மணிக்கு, மகராஜ் ‘ஒற்றை இளம் யானை’ உயிரிழந்ததாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித் துள்ளன. யானை இறந்ததைத் தொடர்ந்து, வரகளியாறு முகாம் அருகிலேயே பிரேத பரிசோதனை நடந்ததாகவும் அவர்கள் தெரி வித்துள்ளனர். மதுக்கரை வனப் பகுதியில் 3 வருடங்களாக சுற்றி வந்த இளம் யானை, பிடிபட்ட 2 நாட்களிலேயே உயிர் இழந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மயக்கமருந்து சர்ச்சை

மதுக்கரை ராணுவ முகாம் வளாகத்தில் 70 மீட்டர் தொலை வில் இருந்த யானைக்கு, வனத் துறை மருத்துவர்கள் குழு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். அதில் கேட்டமைன், சைலோமைன் ஆகிய மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாகவும், 3.5 டன் முதல் 4 டன், 18 வயது என்ற கணக்கின் அடிப்படையில் 2 முறை மயக்க மருந்து செலுத் தப்பட்டதாகவும் மருத்துவர்கள் குழு தெரிவித்தது.

மேலும் 4 மணி நேரத்துக்கு மயக்கநிலை இருக்குமென்றும், தேவைக்கேற்ப மயக்கமருந்து கொடுக்கப்படுமெனவும் அவர்கள் கூறினர். அதிக அளவில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாலேயே யானை உயிரிழந்ததாகவும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஏற்கெனவே கோவை யில் 2011-ல் மயக்க மருந்து அதிகமாக செலுத்தி பிடிக்க முயன்று ஒரு யானை உயிரிழந் திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in