மதுக் கடைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தாக்குதல்: சாமளாபுரத்தில் முதல்கட்ட விசாரணை தொடக்கம்
மதுக் கடைக்கு எதிரான போராட் டத்தில் பொதுமக்கள் மீது ஏடிஎஸ்பி மற்றும் போலீஸார் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கோவை எஸ்பி ரம்யா பாரதி நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்டு சிசிடிவி பதிவுகளை சேகரித்தார்.
திருப்பூர் மாவட்டம் சாமளா புரத்தில் புதிதாக டாஸ்மாக் மது பானக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 11-ம் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது, ஒரு பெண்ணை ஏடிஎஸ்பி தாக்கினார். பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். தாக்குதலில் ஈடு பட்ட போலீஸார் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின் உட்பட பலரும் வலியுறுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து விசா ரணை நடத்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதிக்கு மேற்கு மண்டல காவல்துறை ஐஜி உத்தரவிட்டார். இதையடுத்து அவர், தனது முதல் கட்ட விசாரணையை நேற்று தொடங் கினார்.
சாமளாபுரத்தில் கடந்த 11-ம் தேதி பொதுமக்கள் 9 மணி நேரம் சாலை மறியல் நடத்திய இடம், பெண்கள் மற்றும் பொதுமக்கள் தாக்கப்பட்ட இடம் மற்றும் அய்யன் கோயில் சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைய இருந்த இடம் ஆகிய இடங்களை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, தடியடி நடந்த மூன்று சாலை சந்திப்பில் இருந்த நகைக் கடைகள், மருத்துவமனை, பேக்கரி, செல்போன் கடைகள் போன்றவற்றில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளையும் விசார ணைக்கு எஸ்பி எடுத்துச் சென்றார்.
இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, ‘‘போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வரும் 17-ம் தேதி சாமளாபுரத்தில் சந்தித்து, தாக்குதல் சம்பவம் குறித்து விசா ரிக்க எஸ்பி திட்டமிட்டுள்ளார். ஏடிஎஸ்பி பாண்டியராஜனிடமும், சட்டம் ஒழுங்கு பணியில் ஈடுபட்ட போலீஸாரிடமும் விசாரிக்கப்படும். 5 முதல் 7 நாட்களுக்கு விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை எஸ்பி ரம்யா பாரதியின் விசாரணை அறிக்கை, மேற்கு மண்டல ஐஜிக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்றனர்.
