

வண்ணாரப்பேட்டையில் செல் போன் கோபுரம் சரிந்ததில் இளைஞர் பலியானார்.
சென்னை வண்ணாரப்பேட்டை மின்ட் தெருவில் ஒரு வீட்டின் 2-வது தளத்தில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் சிக்னல் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று திடீரென அந்த செல்போன் கோபுரம் சரிந்து பக்கத்து கட்டிடத்தின் மீதும், சாலையிலும் விழுந்தது. அப்போது அந்த வழியாக மீன்பாடி வண்டியை தள்ளிக்கொண்டு சென்ற பரந்தாமன் (28) என்பவரின் தலையில் செல்போன் கோபுரத்தின் இரும்பு கம்பிகள் விழுந்து நசுக்கியது.
இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
அந்த பாதையில் நடந்து சென்ற லலிதா(40) என்பவர் மீதும் கம்பிகள் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். அருகே இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு அந்த பெண்ணை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து விரைந்து வந்த வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஏழுகிணறு போலீஸார் நடத்திய விசாரணையில், கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில்தான் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டி ருந்தது. இது 70 ஆண்டுகள் பழைமையான கட்டிடம்.
பழைய கட்டிடத்தின் மீது அதிக எடையுள்ள கோபுரத்தை அமைத் ததே விபத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. செல்போன் கோபுரம் சரிந்து விழுந்ததில், பக்கத்து கட்டிடம் மற்றும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட் டர் போன்றவையும் கடுமையாக சேதம் அடைந்தன.