முகநூல் பக்கத்தில் அரசு செய்தித் துறை

முகநூல் பக்கத்தில் அரசு செய்தித் துறை
Updated on
1 min read

அரசின் ஆக்கபூர்வமான பணிகளையும், முதல்வரின் அறிவிப்புகளையும் பொது மக்களிடம் உடனுக்குடன் கொண்டுசெல்வதற்காக செய்தி மக்கள் தொடர்புத் துறை முகநூல் (Facebook) பக்கத்தைத் தொடங்கி உள்ளது.

தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள், முதல் வரின் அறிவிப்புகள், மக்கள் நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள்குறித்த செய்திகள், புகைப்படங்கள் ஆகிய வற்றை மக்கள் தெரிந்துகொள்வதற்காக செய்தித் தாள்கள், தொலைக்காட்சிகள், செய்தி முகமைகள், காலமுறை இதழ்கள், திரையரங்குகள் மூலம் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

மேலும், தமிழக அரசின் திட்டங்கள், முதல்வரின் அறிவிப்பு கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இணையதளமான HYPERLINK http:/www.tndipr.gov.in மற்றும் அரசு இணையதளமான HYPERLINK http://www.tn.gov.in ஆகியவற்றின் மூலமாகவும் தினமும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சமூக வலைதளங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றின் வளர்ச்சி காரணமாக அரசின் அனைத்து செயல்பாடுகளும் நொடிப் பொழுதில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் முகநூல் (Facebook) மூலம் முதல்வரின் அறி விப்புகள், மக்கள் நலத் திட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை உடனுக்குடன் பதிவிட்டு வெளியிட செய்தி மக்கள் தொடர்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக ‘TN DIPR’ என்ற முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டு அதன்மூலம் அரசின் ஆக்க பூர்வமான பணிகளையும், முதல்வரின் அறிவிப்பு களையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியை செய்தி மக்கள் தொடர்புத் துறை மேற்கொண்டு வருகிறது என்று அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in