

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடுவது ஏன் என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று இது தொடர்பாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறது. பேரவைத் தலைவருக்கு எந்த அளவுக்கு விதிகள் தெரியுமோ, அந்த அளவுக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கும் தெரியும். 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசிக்கப்பட்டால் அதுபற்றி யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என விதிகளில் உள்ளது.
மானியக் கோரிக்கைள் மீது விவாதம் முடிந்து அமைச்சர்கள் பதிலுரை வழங்கிய பிறகு அத்துறை பற்றிய அறிவிப்புகளை முதல்வர் ஏன் வெளியிடுகிறார் என்பதுதான் அவரது கேள்வி. இது எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே பலமுறை எழுப்பிய கேள்விதான்.
எல்லா யோசனைகளும், திட்டங்களும் ஒரே சமயத்தில் அரசுக்கு தோன்றாது. அப்படி தோன்றியிருந்தால் திமுக ஆட்சியிலேயே இந்தத் திட்டங் களை நிறைவேற்றி இருக்க லாமே. நாங்கள் 24 மணி நேரமும் மக்களைப் பற்றியும், மக்களுக்கான திட்டங்கள் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக் கிறோம். அதனால் அமைச்சர் பதிலளித்த பிறகு இந்தத் திட்டத்தை விட்டுவிட்டோமே எனத் தோன்றியதால் அந்த அறிவிப்புகளை நான் வெளியிட் டேன். ஒவ்வொரு துறையிலும் இப்படித்தான்.
அதிமுக அரசு பொறுப்புள்ள அரசு. வாய்க்கு வந்த திட்டங்களை அறிவித்து விடமாட்டோம். கடந்த திமுக ஆட்சியில் இரண்டரை ஏக்கர் நிலம் வழங்குவதாக அறிவித்தார்கள். பிறகு நெல்லிக் கனியளவு, கையளவு நிலம் இருந்தால் கூட கொடுக்கப்படும் என சொன்னார்கள். அப்படி யெல்லாம் நாங்கள் சொல்ல மாட்டோம்.
ஒரு திட்டத்தை அதனை செயல்படுத்த முடியுமா என நூறு முறை ஆலோசித்த பிறகு அறிவிப்பேன். எனவே, இங்கே திட்டங்களை அறிவிப் பதற்கு முன்பு நிதித் துறை செயலாளருடன் ஆலோசனை நடத்துகிறேன். அதற்கு நிதி உண்டு என அவர் ஒப்புதல் அளித்த பிறகே அந்தத் திட்டத்தை அறிவிக்கிறேன்.
மூன்று நிலைகள்
கடந்த 5 ஆண்டுகளில் திட்டங்களுக்கு எப்படி நிதி ஒதுக்கப்பட்டதோ, அதன்படி இப்போதும் நான் அறிவிக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப் படும். அரசின் வரவு, செலவு களைப் பொறுத்தவரை பி.இ, ஆர்.இ, எப்.எம்.ஏ. என மூன்று நிலைகள் உள்ளன. இதைப்பற்றி தெரிந்திருந்தால் எந்தக் குழப்பமும் ஏற்பட வாய்ப்பில்லை.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.