Published : 25 Mar 2017 08:17 AM
Last Updated : 25 Mar 2017 08:17 AM

கன்னியாகுமரி அருகே பரிதாபம்: வேன் மீது லாரி மோதியதில் 4 கல்லூரி மாணவிகள் பலி

தக்கலை அருகே கல்லூரி முடிந்து மாணவிகள் வேனில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது வேன் மீது லாரி மோதியதில் 4 மாணவிகள் உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுங்காங்கடையில் உள்ள ஐயப்பா பெண்கள் கல்லூரியில் நேற்று மாலை வகுப்புகள் முடிந்து மாணவிகள் வீடு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது, வேன்களில் சிலர் கட்டணத்துக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு இருந் தனர். அந்த வேனில் மாணவிகள் சிலர் ஏறினர்.

நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் சென்றது. அப்போது, எதிரே கேரளாவில் இருந்து வந்த லாரியும், வேனும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் தக்கலையை அடுத்துள்ள பரைகோட்டையை சேர்ந்த மஞ்சு(19), புங்கரையை சேர்ந்த தீபா(19), சிவரஞ்சனி(19) ஆகியோர் வேனுக்குள் படுகாய மடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காட்டுவிளையைச் சேர்ந்த சங்கீதா(23)என்ற மாணவி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்து போனார்.

9 பேர் படுகாயம்

மேலும் 9 மாணவியர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனை வரும் ஆசாரிபள்ளம் அரசு மருத் துவமனை மற்றும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்ததும் தக்கலையைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் பென்னட் தப்பி ஓடிவிட்டார். தக்கலை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்பி தர்மராஜன் விசாரணை நடத்தினார்.

விபத்தால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ் சாலையில் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது. சாலை விபத்தில் மாணவி யர் 4 பேர் பலியானதை அறிந்ததும், உறவினர்களும், சக மாணவியரும் அங்கு திரண்டு கதறி அழுதனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x