Published : 21 Jan 2014 10:06 AM
Last Updated : 21 Jan 2014 10:06 AM

பா.ஜ.க-வினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டேன்- முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பேட்டி

பா.ஜ.க.வினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டேன் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், தேசிய கலாச்சார ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான மணி சங்கர் அய்யர் தெரிவித்தார்.

கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாள் ஒன்றியம், உக்கரை ஊராட்சி தத்துவாஞ்சேரி கிராமத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், சிறப்புத் தன்னிறைவுத் திட்டம் மற்றும் ஒன்றியப் பொது நிதி ரூ. 41 லட்சத்தில் கட்டப்பட்ட முன்னாள் எம்எல்ஏ தியாகி ராமாமிர்ததொண்டைமான் நினைவு சமுதாயக் கூடம் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

காங்கிரஸ் கட்சியை தரம் தாழ்ந்து பலமுறை நரேந்திர மோடி விமர்ச்சித்து வந்தபோதும், அரசியல் நாகரிகம் கருதி அதற்கு சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ பதில் அளிக்கவில்லை. அதனால்தான், நானே மோடிக்குத் தக்க பதிலடி கொடுத்தேன். காங்கி ரஸ் கட்சி குறித்து மீண்டும் விமர் சித்தால் அதேபோன்று பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டேன் என்றார் மணிசங்கர் அய்யர்.

சமுதாயக் கூடம் திறப்பு விழாவில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தலைவர் எஸ். வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற கிராமிய நடனக்கலை நிகழ்ச்சிகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

கருப்புக் கொடி காட்ட முயன்ற பாஜகவினர்:

முன்னதாக, தத்துவாஞ்சேரி பந்தநல்லூர் சாலை சந்திப்பில் மணிசங்கர் அய்யருக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக பாஜகவினர் 50-க்கும் அதிகமானோர் திரண்டி ருந்தனர்.

ஆனால், விழா இடத் துக்கு மணிசங்கர் அய்யர் வேறு பாதையில் சென்றார். இதையடுத்து, பாஜகவினர் மணி சங்கர் அய்யரைக் கண்டித்து முழக் கங்களை எழுப்பினர். போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

மணிசங்கர் அய்யரின் வருகையையொட்டி திருப்பனந் தாள், தத்துவாஞ்சேரி பகுதியில் ஏடிஎஸ்பி கல்யாணசுந்தரம், கும்பகோணம் டிஎஸ்பி சுயம்பு ஆகியோர் தலைமையில் ஏரா ளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x