Published : 26 Jul 2016 09:00 AM
Last Updated : 26 Jul 2016 09:00 AM

பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பில்லை: பெண்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் தேவை - இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு வலியுறுத்தல்

பணிபுரியும் இடங்களில் பெண் களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர் களைப் பாதுகாக்க சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் நேற்று மதுரை யில் செய்தியாளர்களிடம் கூறியதா வ து: தலித், பழங்குடியின மக்கள் மீது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த அடக்குமுறைகள் தற்போது மீண்டும் தலைதூக்கி உள்ளது. காவல்துறையில் கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் குற்றவா ளிகள் கிடைக்காதபட்சத்தில் தலித், பழங்குடியின மக்கள் மீது பொய் வழக்குகள் போட்டு அதை ஒத்துக்கொள்ள சொல்லி சட்டத்துக்கு மீறிய காவல் தண்டனை கொடுக் கின்றனர் . அவர்களை குற்றப்பரம்பரை யாக நினைத்துக் கொண்டு வாழ விடாமல் வேலைப்பார்க்க விடாமல் தடுக் கின்றனர். இத்தகைய கொடுமை, தமிழகத்தில் மட்டுமில்லாது நாடு முழுவதும் நடக்கிறது.

தலித், பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் நடவடிக்கை இல்லை. வழக்கு போட்டாலும், புகார் கொடுத்தாலும், 6 முதல் 7 சதவீத வழக்குகளில்தான் இதுவரை தீர்வு, தண்டனை கிடைத்துள்ளது. மற்ற வழக்குகள் எந்த விசாரணையும் இல் லாமல் கிடப்பில் போடப்பட் டுள்ளது.

தலித், பழங்குடியின மக்களைக் காப்பாற்ற சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். மாவட்டங்கள்தோறும் நீதி பதிகள், போலீஸார் மற்றும் தன்னார் வலர்களை கொண்டு கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும்.

ஆணவக் கொலை தமிழகத்தில் நோய் மாதிரி பரவிக் கொண்டிருக் கிறது. பெண்களுக்கு பணிபுரியும் இடங்கள், இணையதளங்களில் பாது காப்பு இல்லை. அவர்களைப் பாது காக்க சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். கல்விக்கடன் பெற்ற மாண வர்களிடம் வேலை கிடைக்கும் முன்பே கடனை கேட்டு நாட்டுடமை யாக்கப்பட்ட வங்கிகள், தனியார் ஏஜென்சிகள் மூலம் தொந்தரவு செய்கின்றன. இதனால், அவமானம் தாங்காமல் வாழ்க்கையை தொடங்கும் முன்பே மாணவர்கள் தற்கொலை செய்வது, நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. 23 தலித் மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சமீப காலத்தில் இறந்துள்ளனர். இதுபற்றிய நீதி விசாரணை, தீர்வு இல்லாமல் செல்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x