

வழக்கமான உடல் நிலைப் பரிசோதனைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நள்ளிரவு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்கு செல்வதைப்போல், இந்த ஆண்டும் மியாட் மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்கு (General Medical CheckUp) செல்கிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் மருத்துவமனைக்கு நேரில் வரவேண்டாம், ஓரிரு நாளில் மருத்துவ பரிசோதனை முடிந்து வீடுதிரும்புவார் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது”
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.