

ஆர். ரகுநாதன் - அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் துணைச் செயலாளர்:
அரக்கோணம் வழியாகக் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று எம்.பி. வாக்குறுதி கொடுத்தார். அப்படி எதுவும் நடக்கவில்லை. தவிர, சென்ட் தொழிற்சாலை, மத்திய அரசின் விளைபொருள் கொள்முதல் நிலையம், பொறியியல் கல்லூரி ஆகியவை அமைக்கப்படும் என்று அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, தொகுதிப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்காமல் ஜெகத்ரட்சகன் மக்களை ஏமாற்றிவிட்டார்.
சரவணன் - பா.ம.க., வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர், அரக்கோணம் தொகுதி:
எம்.பி-யைத் தொகுதி மக்கள் எதற்காகவும் அணுக முடியாது. அவர் எப்போது தொகுதிக்கு வருவார் என்று அவரது கட்சி நிர்வாகிகளுக்கே தெரியாது. அவர் அமைச்சராக இருந்ததன் மூலம் தொகுதிக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், அவரது கட்சித் தலைவரின் பணிகளைக் கவனிப்பதில்தான் அவரது பெரும்பாலான நேரம் கழிந்தது.