Published : 11 Aug 2016 11:58 AM
Last Updated : 11 Aug 2016 11:58 AM

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு சீட் இல்லை: திமுக-அதிமுக முடிவால் நிர்வாகிகள் கலக்கம்

உள்ளாட்சித்தேர்தலில் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு சீட் கொடுக்கக்கூடாது என திமுக, அதிமுக கட்சி மேலிடங்கள் முடிவெடுத்துள்ளதால் அக்கட்சி நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. திமுக, அதிமுக கட்சிகள், வேட் பாளர் தேர்வு முறை, தேர்தல் வியூகம் அமைப்பது பற்றி தீவிர ஆலோசனை, அதற்கான தேர்தல் பணிகள், கூட் டங்கள் நடத்தி வருகின்றன. சட்டமன்ற தேர்தல், மக்களவைத்தேர்தல்களில் பொதுமக்கள், கட்சி வேட்பாள ர்களுக்கே முக்கியத்துவம் கொடுப் பார்கள். சுயேச்சைகளுக்கு வெற்றி வாய்ப்பும், அவர்களுடைய வாக்கு சதவீதமும் குறைவாகவே இரு க்கும். உள்ளாட்சித்தேர்தலில் கட்சி க்கு அப்பாற்பட்டு போட்டியிடும் வேட்பாளர் தகுதியைப் பார்த்தே மக்கள் வாக்களிப்பார்கள். அதனால், செல்வாக்குள்ள கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் மட்டுமே வெல்ல வாய்ப் புள்ளது.

இந்நிலையில் திமுக, அதிமுகவில் இந்த உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் மேயர் பதவிக்கு சீட் கேட்கலாம் என காத்திருந்தனர். தற்போது மேயர் நேரடி தேர்வு முறை ரத்தானதால், கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டால் ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலம் பாழாகிவிடும் என்பதால் போட்டியிட தயக்கம் காட்டுகின்றனர்.

இதற்கிடையில் மேயரை கவுன்சி லர்களே தேர்ந்தெடுப்பதால் மேயர் தேர்வில் திரைமறைவு குதிரைப் பேரத்தில் கவுன்சிலர்கள் விலை போக வாய்ப்புள்ளது. அதனால், திமுக, அதிமுக கட்சிகள் உள்ளாட்சித்தேர்தலில் வேட்பாளர் தேர்வு முறையில் மிகுந்த கவனம் செலுத்த தொடங்கி உள்ளன.

சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்விக்கு அக்கட்சியின் வேட்பா ளர் தேர்வு முறை போன்றவை முக்கிய காரணமாக கருதப்பட்டது. ஆனால், மதுரை மத்திய தொகுதியில் ஓட்டுக்கு பணமே கொடுக்காத திமுக வேட்பாளர் பி.டி.ஆர்.பி.தியாகராஜன் வெற்றி பெற்றதாக பலரும் கூறுகிறார்கள்.

அதனால், திமுகவில் இந்தமுறை மதுரை மத்திய தொகுதியை முன் உதாரணமாக கொண்டு உள் ளாட்சித்தேர்தலில் நேர்மையான, குற்றவழக்குகளில் தொடர்பு இல்லாதவர்களுக்கு உள்ளாட்சித் தலைவர், கவுன்சிலர் பதவிக்கான சீட் வழங்க அக்கட்சி மேலிடம் முடிவெடுத்துள்ளதாக கூறப் படுகிறது.

அதிமுகவில் ஒரு புறம் இந்த முறை வார்டு வாரியாக போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.

மற்றொரு புறம் உளவுத்துறை மூலம் வார்டுகளில் செல்வாக்குள்ள கட்சி பிரமுகர்கள் யார்யார் என்பது பற்றி ரகசியமாக விசாரிக்கப்படுவதால் நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மேயரை கவுன்சிலர்களே தேர்ந்தெடுப்பதால் மேயர் தேர்வில் குதிரைப் பேரத்தில் கவுன்சிலர்கள் விலை போக வாய்ப்புள்ளது. அதனால், திமுக, அதிமுக கட்சிகள் உள்ளாட்சித்தேர்தலில் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x