

ஆரோவில்லில் கர்நாடக பதி வெண் கொண்ட பத்திரிகை யாளர் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில் பகுதியில் வசிப்பவர் நந்தினி சென் குப்தா. இவர் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றுகிறார். நேற்று இவர் வெளியே சென்றிருந்தார். அவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை அங்கு வந்த 10-க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் காரின் கண்ணாடி உடைந்து சேதமடைந் துள்ளது. இதுதொடர்பான புகாரின்பேரில் ஆரோவில் போலீஸார் விசாரிக்கின்றனர்.