திமுக, அதிமுக சகாப்தம் முடிந்துவிட்டது: பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக, அதிமுக சகாப்தம் முடிந்துவிட்டது: பொன்.ராதாகிருஷ்ணன்
Updated on
1 min read

மதுரை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று கூறிய தாவது:

யார் முதல்வராக வந்தால் சிறப்பாக இருக்கும் என்பதைவிட, யார் முதல்வராக வந்தால் சிறப் பாக இருக்காது என்பதுதான் முக்கியம். தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்ற திமுக, அதிமுக ஆட்சியில் ஊழல்கள் நிறைந்துள்ளன. அதிமுக சகாப் தமும், திமுகவின் சரித்திரமும் முடிந்துவிட்டது. தமிழகத்தில் புதிய தேடல் ஆரம்பித்துள்ளது. இந்த நேரத்தில் தமிழகத்தில் பாஜகவால் ஊழலற்ற ஆட்சியைத் தர முடியும். தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என உறுதி அளிக்கிறோம்.

பேரவை உறுப்பினர்களைச் சுதந்திரமாக செயல்பட அனுமதிக் காமல், எந்தக் கணக்கெடுப்பு நடத்தினாலும் அது வெறும் கண்துடைப்பாகவே இருக்கும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in