Published : 09 Mar 2017 06:27 PM
Last Updated : 09 Mar 2017 06:27 PM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு

சென்னையில் தங்கத்தின் விலை வியாழக்கிழமை ஒரு சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.22 ஆயிரத்து 072க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. தங்கத்தின் தேவை கணிசமாக குறைந்துள்ளது. இதனால், உள்ளூரிலும் தங்கம் விலை குறைந்து வருகிறது. சென்னையில் வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.22 ஆயிரத்து 072க்கு விற்கப்பட்டது.

22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 759க்கு விற்கப்பட்டது. இதுவே, புதன்கிழமை ரூ.2 ஆயிரத்து 777க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x