நீர்நிலைகளை பாதுகாக்கக் கோரி காஞ்சி மாவட்டத்தில் நடைபயணம்: மாதர், வாலிபர் சங்கத்தினர் நடத்தினர்

நீர்நிலைகளை பாதுகாக்கக் கோரி காஞ்சி மாவட்டத்தில் நடைபயணம்: மாதர், வாலிபர் சங்கத்தினர் நடத்தினர்
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலை களைப் பாதுகாக்க வேண்டும், பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 3 நாள் நடைபயணம் தொடங்கியது.

ஏரிகள் நிறைந்த மாவட்டமாக கருதப்படும் காஞ்சிபுரம் மாவட் டத்தில் நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்காததாலும் பாலாற்றில் நடைபெற்ற மணல் கொள்ளை யினாலும் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இதனால், மாவட்டத்திலுள்ள ஏரி குளங்களை கணக்கெடுப்பு செய்து, நீர்வரத்து வழிகளை பராமரித்தல் மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களை தூர்வாருதல், பாலாற்றில் 5 கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணையைக் கட்டி மழை நீரைச் சேமித்தல், அரசு சார்பில் அனைத்து பகுதிகளிலும் இளைஞர், மாணவர், பெண்கள், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் கொண்ட நீர் பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்துதல், பாலாற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து மாதர் சங்கம், வாலிபர் மற்றும் மாணவர் சங்கத்தின் சார்பில் 3 நாள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்ச்சி திருப்போரூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா நடைபயணத்தை தொடங்கி வைத்தார். திருப்போரூரில் தொடங்கி செங்கல்பட்டு, சிங்கப் பெருமாள்கோவில், வாலாஜாபாத் வழியாக நடைபயணக் குழு காஞ்சி புரம் வந்தடைகிறது.

இதேபோல் சித்தாமூர் மற்றும் மாங்காடு ஆகிய பகுதிகளிலும் நடைபயணம் தொடங்கியது. நடை பயணத்தின் நிறைவு நாளான இன்று காஞ்சிபுரத்தில் 3 சங்க கங்களின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நடை பயண நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நீர் பாதுகாப்பு குறித்த பிரசுரங்களையும் மக்க ளிடம் நடைபயணக் குழு விநி யோகித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in