

ஜாங்கிட், ஜாபர்சேட் உட்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட் டுள்ளனர்.
தமிழ்நாடு போக்குவரத்து ஊழல் தடுப்பு ஏடிஜிபியாக இருந்த ஜாங்கிட் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரியாக இருந்த ஜாபர்சேட் தமிழ்நாடு காவலர் பயிற்சி பள்ளி, ஊமனாஞ்சேரி ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு சிறைத்துறை ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். தமிழ்நாடு போக்குவரத்துக் கழக சிறப்பு அதிகாரியாக இருந்த காந்திராஜன் மாநில மனித உரிமைகள் ஆணைய ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஊழல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில மனித உரிமைகள் ஆணைய ஏடிஜிபியாக இருந்த அமரேஷ் புஜாரி மாநில போக்குவரத்து திட்டமிடல் பிரிவு ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.