Published : 17 Sep 2016 09:06 AM
Last Updated : 17 Sep 2016 09:06 AM

சென்னை துறைமுகத்தில் ரூ.24 கோடி மதிப்பில் கன்டெய்னர் லாரி ஸ்கேனர் திறப்பு

சென்னை துறைமுகத்தில் சுங்கத்துறை சார்பில் ரூ.24 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள கன்டெய்னர் ஸ்கேனர் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

சென்னை துறைமுகத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கன்டெய் னர்களில் சட்ட விரோதமான முறையில் பொருட்கள் கடத்தப் படுவதைத் தடுக்கும் பொருட்டு, சென்னை சுங்கத்துறை சார்பில் ரூ.24 கோடி செலவில் நவீன கன்டெய்னர் ஸ்கேனர் கருவி நிறுவப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இக்கருவியின் மூலம் ஒரு மணி நேரத்தில் 12 கன்டெய்னர்களை சோதனை இட முடியும். அத்துடன், இக்கருவியில் உள்ள எக்ஸ்ரே கருவி மூலம் 400 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட இரும்புத் தகடுகளை ஊடுருவிச் சென்று கன்டெய்னரில் உள்ள பொருட்களை கண்டுபிடிக்க முடியும். அதிகபட்சமாக 60 டன் எடையுள்ள கன்டெய்னர்களை இக்கருவி மூலம் சோதனை இட முடியும்.

இதன்மூலம், வெடிபொருட்கள், போதைப் பொருட்கள் உள்ளிட் டவை சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுவதை எளிதில் கண்டுபிடித்து தடுக்க முடியும். மேலும், துறைமுகத்தில் கன்டெய்னர் சரக்குகளை கையா ளும் திறனும் அதிகரிக்கும்.

ஏற்கெனவே, குஜராத் கான்ட்லா துறைமுகம், மும்பை மற்றும் தூத்துக்குடியில் இந்த ஸ்கேனர் நிறுவப்பட்டுள்ளது. தற்போது, சென்னை துறைமுகத் திலும் இந்த ஸ்கேனர் கருவி நிறுவப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று நடை பெற்றது.

மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை வாரியத்தின் சிறப்பு செயலாளரும் உறுப்பினருமான வனஜா என்.சர்னா இதை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது, ‘‘மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் மின்னணு (டிஜிட்டல்) முறையை புகுத்தி வருகிறது. அந்த வரிசையில் சுங்கத் துறையும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

வளர்ந்த நாடுகளில் கூட கன்டெய்னர்களை சோதனை செய்வதற்காக இத்தகைய வசதிகள் கொண்ட கருவிகள் கிடையாது. அந்த வகையில் நாம் பெருமை கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் கருவி பொருத்தப்பட்டுள்ளதன் மூலம் துறைமுக வர்த்தகம் மேற்கொள்வது எளிதாவதோடு அதிகளவில் முதலீடுகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது’’ என்றார்.

சென்னை சுங்கத் துறை முதன்மை ஆணையர் பிரணாப் குமார் தாஸ் பேசும்போது, ‘‘சுங்கத்துறை வருமானத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதில்லை. மாறாக, பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு சுங்கத் துறைக்கு ரூ.35 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகம் ஆகும். இந்த ஆண்டுக் கான வருவாய் இலக்கு ரூ.40 ஆயிரத்து 150 கோடியாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

நிகழ்ச்சியில், சென்னை சுங்கத் துறை ஆணையர்கள் மாயன்குமார், பிரகாஷ் குமார் பெஹ்ரா, துணை ஆணையர் எம்.ரமேஷ், லாஜிஸ்டிக் பிரிவு ஆணையர் சந்தீப் பிரகாஷ், பெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் குமார் சர்மா, காமராஜர் துறைமுகத்தின் தலைவர் பாஸ்கராச்சார்யா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x