

வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளைத் திருத்த நடவடிக்கை எடுக்குமாறு தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, சட்டப் பிரிவு இணைச் செயலாளர் ஆர்.கிரிராஜன், வழக்கறிஞர் பரந்தாமன் ஆகியோர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவை நேற்று சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், தவறுகளை சரி செய்து திருத்த மிடுவதற்காக விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித் திருந்தது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் உண்மையான வாக் காளர்கள் இடம் பெறுவதற்காக வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் திமுக உதவியது. அப்போது, வாக்காளர் பட்டியலில் சில தவறுகள் இருப்பது தெரியவந்தது. இந்த தவறுகள் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.
வாக்காளர் பட்டியலில் சிலரது பெயர் 2 இடங்களில் இடம்பெற் றுள்ளன. சில வாக்காளர்களின் பெயர், அவர்களின் புகைப்படத்துடன் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், வேறு வேறு அடையாள அட்டை எண்ணுடன் உள்ளது. இதன்மூலம் தேர்தலில் அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை, தங்கள் வாக்கை பதிவு செய்ய முடியும். இது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல. இதை தேர்தல் கமிஷன் தடுத்து நிறுத்த வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் உரிய முறையில் திருத்தங்கள் செய்யும் பொறுப்பு, அந்தந்த பகுதி தாசில்தார்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்களிடம் இந்தக் குறைபாடுகள் குறித்து சுட்டிக்காட்டியும், திருத்தங்களை மேற்கொள்ள போதுமான ஆர்வம் காட்டவில்லை. இதை திமுக வாக்குச்சாவடி முகவர்கள், உரிய ஆதாரங்களுடன் எங்களிடம் சுட்டிக்காட்டினர்
சைதாப்பேட்டை தொகுதிக் குட்பட்ட 142-வது வார்டில் சுமதி, சரவணன் ஆகியோரது பெயர், 2 இடங்களில் வேறு வேறு அடையாள அட்டை எண்களுடன் பதிவாகியுள்ளதை உதாரணத் துக்காக கொடுத்துள்ளோம். இத்தகைய தவறுகளை, சரி செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.