பால்வளத் துறைக்கு ரூ.121.69 கோடி ஒதுக்கீடு

பால்வளத் துறைக்கு ரூ.121.69 கோடி ஒதுக்கீடு
Updated on
1 min read

பால்வளத் துறைக்கு ரூ.121.69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு பேரவையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அவர் தனது பட்ஜெட் உரையில் பால்வளத் துறை பற்றி குறிப்பிடுகையில், ''கடந்த ஐந்து ஆண்டுகளில், பல்வேறு திட்டங்களின் கீழ், 593.65 கோடி ரூபாய் செலவில் பால்வளத் துறைக்கான பல்வேறு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அதிகரித்து வரும் பால் கொள்முதலைச் சமாளிக்க, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலையில் புதிய பால் பண்ணைகளும், அம்பத்தூரில் பால் பொருட்கள் தயாரிக்கும் அலகும் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய முயற்சிகளால், ஆவின் நிறுவனம் தனது பால் கொள்முதலை, நாளொன்றுக்கு 28.97 லட்சம் லிட்டர் அளவிற்கு அதிகரித்து, 22.95 லட்சம் நுகர்வோரின் தேவையை நிறைவு செய்து வருகிறது.

தென் மாவட்டங்களில், பால்வளத்தை ஊக்குவிக்க 45 கோடி ரூபாய் செலவில், புதிய பால் பொருட்களைத் தயாரிக்கும் அலகு ஒன்று மதுரையில் அமைக்கப்படும். இதன் மூலம், ஐஸ்க்ரீம் உட்பட பல்வேறு பால் பொருட்கள் தயாரிக்கப்படும்.

2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பால்வளத் துறைக்கு ரூ.121.69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in