தேசியக் கொடியை அவமதித்த அமேசான் நிறுவன விற்பனையை தடை செய்ய வேண்டும்: விஜயகாந்த்

தேசியக் கொடியை அவமதித்த அமேசான் நிறுவன விற்பனையை தடை செய்ய வேண்டும்: விஜயகாந்த்
Updated on
1 min read

தேசியக் கொடி போன்ற செருப்பு விற்பனை செய்வதால் அமேசான் நிறுவன விற்பனையை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி போன்ற கால்மிதியடி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் இச்செயல் ஏற்றுக் கொள்ள முடியாததுடன், கடும் கண்டனத்துக்குரியது ஆகும். இது, இந்தியாவையும், இந்தியர்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.

உடனடியாக அமேசான் நிறுவனம் தனது இணையதளத்தில் இருந்து இந்தியாவை அவமதிக்கும் வகையில் உள்ள தேசியக் கொடி படத்தை நீக்குவது மட்டுமின்றி, மன்னிப்பு கேட்க வேண்டும். அமேசான் நிறுவனம் விற்பனையை இந்தியாவில் தடை செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in