

நிலவில் தாவரங்களை வளர்க்க முடியுமா என்பது குறித்து திரு வாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள் தயா ரித்த செயல்திட்ட ஆய்வறிக்கை (புராஜெக்ட்) உலக அளவில் சிறந்த ஆய்வறிக்கைகளில் ஒன் றாக தேர்வு பெற்றுள்ளது.
உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த விஞ்ஞானிகள் உறுப்பினர்களாக உள்ள ‘டீம் இன்டஸ்’ என்ற அமைப்பு விண் வெளி ஆராய்ச்சி குறித்த ‘லேப் டூ மூன்’ என்ற செயல்திட்ட அறிக்கை தயாரிக்கும் போட்டியை கடந்த செப்டம்பர் மாதம் நடத்தியது. மாண வர்களின் ஆராய்ச்சி மனப்பான் மையை வளர்க்கும் இப்போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 300 நகரங்களில் இருந்து 3 ஆயிரம் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட் டன. இவற்றில் 25 ஆய்வறிக்கைகள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகின. இதில், திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள் சந்தோஷ் ராய் சவுத்ரி, சுகன்யா ராய் சவுத்ரி ஆகியோர் அமெரிக்காவில் அரிசோனா பல் கலைக்கழக மாணவியுடன் இணைந்து சமர்ப்பித்த ஆய்வறிக் கையும் ஒன்று.
உலக அளவில் சிறந்த புராஜெக்ட் டுகளில் ஒன்றாக தேர்வாகியுள்ள செயல்திட்ட ஆய்வறிக்கையை தயாரித்த தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ஏபி.தாஷ், தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் பிரான்சிஸ் ப்ரான்க்லே மற்றும் பேராசிரியர்கள், பிற மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆராய்ச்சி மாண வர்கள் சந்தோஷ் ராய் சவுத்ரி, சுகன்யா ராய் சவுத்ரி ஆகியோர் கூறும்போது, “தாவரங்களை நில வில் உயிர்ப்பித்தால் எதிர்காலத்தில் மனிதர்களும் நிலவில் குடியேறி வாழ முடியும் என்ற ஆராய்ச்சிக்கான அடிப்படையாக இந்த செயல்திட்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளோம்” என்றனர்.
ஆய்வறிக்கை விவரம்
100 டிகிரி வெப்பத்தையும் தாங்கி வளரும் தாவரங்கள் மட்டுமே நிலவில் உயிர் வாழ முடியும். அந்த வகையில் 100 டிகிரியை தாங்கும் Extremophile cyano என்ற பாக்டீரியாவை லேசர் கருவியுடன் அமைத்து, அதை கண்காணிக்கும் கேமராவையும் பொருத்தி, ஒரு கேப்சூல் வடிவ உறையில் அடைத்து நிலவுக்கு அனுப்பி அங்கு ஏற்படும் மாற்றத்தை ஆராய வேண்டும் என்பதே இந்த செயல்திட்ட ஆய்வறிக்கை.