

நதிகள் இணைப்பு உள்ளிட்ட விவசாய பிரச்சினைகளுக்கு நடிகர் ரஜினிகாந்திடம் ஆதரவு கோருவதற்கு விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
திருப்பூரில் உழவர் உழைப் பாளர் கட்சியின் மாநில செயற் குழுக் கூட்டம் நேற்று நடைபெற் றது. மாநிலத் தலைவர் கு.செல்ல முத்து தலைமை வகித்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “ரஜினியை சந்தித்து விவசாயிகள் ஆதரவு கோருவது எங்களை பொறுத்த வரை கேவலமானது. உலகுக்கே சோறுபோட்ட விவசாயி, மற்றவரிடம் சென்று ஆதரவு கேட்டு நிற்பதை கண்டிக் கிறோம்.
வரலாறு காணாத வறட்சியால் விவசாயிகள் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு எதுவும் செய்ய வில்லை. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும். வறட்சி நிவாரணம் முழுமையாக வழங்க வேண்டும்.
உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையில், அனைத்து விவசாயி களுக்கும் கடன் நிவாரணம் வழங்க வேண்டும். மாநில நதிகளை இணைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனில் அக்கறை கொள்ளாத மாநில அரசைக் கண்டித்து, உழவர் தின மான ஜூலை 5-ம் தேதி போராட் டத்தில் ஈடுபட முடிவு செய்துள் ளோம்” என்றார்.
பி.ஆர்.பாண்டியனும் எதிர்ப்பு
நதிகளை இணைப்பதற்கு நடிகர் ரஜினிகாந்திடம் அய்யாக் கண்ணு போன்ற சில விவசாயிகள் ஆதரவு கேட்டதற்கு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித் துள்ளது குறிப்பிடத்தக்கது.