Published : 26 Nov 2014 01:22 PM
Last Updated : 26 Nov 2014 01:22 PM

ராமநாதபுரம் மண்டபம் அருகே பெட்ரோலிய வளம்: ஓஎன்ஜிசி ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே பெட்ரோலிய இயற்கை வளங்கள் குறித்த ஆய்வை இந்திய எண்ணெய் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) நிறுவனம் தொடங்கியுள்ளது.

ராமேசுவரம், அதனைச் சுற்றியுள்ள பாக். ஜலசந்தி கடல், மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் பெட்ரோலிய உள்ளிட்ட இயற்கைவளங்கள் குறித்த ஆய்வை கடந்த ஆகஸ்ட் 22 முதல் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய எண்ணெய் இயற்கை எரிவாயுக் கழக (ஓஎன்ஜிசி) நிறுவனம் மேற்கொண்டுவருகிறது.

பெட்ரோலிய இயற்கை வளங்கள் , தாதுப்பொருட்கள், தட்பவெப்ப மாற்றம் குறித்த இந்த ஆய்வுக்காக ரஷியாவைச் சேர்ந்த 20 விஞ்ஞானிகளும் இந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

கடலில் சோதனைகளை நிறைவு செய்த ஓஎன்ஜிசி நிறுவனம் தற்போது நிலப்பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வைத் தொடங்கியுள்ளது. இந்த ஆய்வுக்காக மண்டபம் முதல் பனைக்குளம் வரையிலான நிலப்பகுதிகளைத் தேர்வு செய்து இந்த ஆய்வுப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

முன்னதாக ராமநாதபுரம் அருகே வழுதூரில் இயற்றை எரிவாயு கண்டறியப்பட்டு அங்கு மின் உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x