Published : 08 Apr 2017 08:39 AM
Last Updated : 08 Apr 2017 08:39 AM

தமிழ் பல்கலை.யின் டிப்ளமோ படிப்பு இசை ஆசிரியர் பதவிக்கு தகுதியானது: தமிழக அரசு அரசாணை வெளியீடு

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத் தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் வழங்கும் இசை ஆசிரியர் டிப்ளமோ படிப்பு, இசை ஆசிரியர் பதவிக்கு தகுதியானது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை செயலர் (பொறுப்பு) இரா.வெங்கடேசன் கடந்த மார்ச் 15-ம் தேதி பிறப் பித்த அரசாணையில் கூறப்பட் டுள்ளதாவது:

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பை வழங்கி வருகிறது. இந்தப் படிப்பானது, பள்ளிக்கல்வித் துறையின் இசை ஆசிரியர் பதவிக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோவுக்கு இணையானது என்று தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) இணைப்புக்குழு (Equivalence Committee) தீர்மானித் துள்ளது. அதன் அடிப்படையில், தமிழ் பல்கலைக்கழக தொலை தூரக் கல்வி இயக்கக இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ கல்வித் தகுதியானது அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் இசை ஆசிரியர் நியமனத்துக்கு பொருந்தும் என அரசாணை வெளியிடுமாறு பல்கலைக்கழகப் பதிவாளர் அரசை கேட்டுக் கொண்டார்.

அவரது கருத்துரு மற்றும் டிஎன்பிஎஸ்சி இணைப்புக் குழுவின் தீர்மானம் ஆய்வு செய் யப்பட்டது. தமிழ் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் வழங்கும் இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ கல்வித் தகுதியை, பள்ளிக்கல்வித் துறையின் இசை ஆசிரியர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோவுக்கு இணையானதாக கருதலாம் என அரசு முடிவுசெய்து ஆணை வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x