மக்கள் தேமுதிக தலைவர்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு: இணைப்பு விழா குறித்து ஆலோசனை

மக்கள் தேமுதிக தலைவர்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு: இணைப்பு விழா குறித்து ஆலோசனை
Updated on
1 min read

மக்கள் தேமுதிக தலைவர்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த் திபன், சி.எச்.சேகர் ஆகி யோர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை நேற்று மாலை சந்தித்துப் பேசினர்.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததற்கு எதிர்ப்பு தெரி வித்து அக்கட்சியின் அன்றைய எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திர குமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்டோர் மக்கள் தேமுதிகவை தொடங்கினர்.

இவர்கள் திமுக கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். இந்நிலை யில் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத் தில், மக்கள் தேமுதிகவை கலைத்து விட்டு திமுகவில் இணைவது என முடிவு செய்தனர்.

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் மிகப் பெரிய விழா நடத்தி திமுகவில் இணைய அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக ஸ்டாலினை நேற்று மாலை அவரது இல்லத்தில் வி.சி. சந்திரகுமார் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.

இணைப்பு விழாவை எங்கு, எப்போது நடத்துவது, தேமுதிகவில் இருந்து மேலும் பல முக்கிய நிர்வாகிகளை திமுகவில் இணைப்பது தொடர் பாக ஸ்டாலினுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in